காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜா! - சி.எஸ்.கே அணியின் ரியாக்சன் என்னனு பாருங்க!

இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 23, 2022, 02:20 PM IST
  • இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம்.
  • காயம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டரில் பதிவு.
  • இருதரப்புக்கும் இடையே மோதல் எனக் கூறப்படும் நிலையில் பதிவு
காயம் அடைந்த ரவீந்திர ஜடேஜா! - சி.எஸ்.கே அணியின் ரியாக்சன் என்னனு பாருங்க! title=

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடிவருகிறது.

இந்த நிலையில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார். இந்த தகவலை பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழு அவரை கண்காணித்து வரும் நிலையில் அவரது காயம் குணமாகும் தன்மையை பொறுத்தே மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜடேஜாவின் புகைப்படத்தைப் பகிர்ந்து ராக் ஸ்டார் எனக் குறிப்பிட்டுள்ள சென்னை அணி, அவர் விரைவில் குணமடையவேண்டும் என வாழ்த்தியுள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சி பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக சி.எஸ்.கே வீரர் ரவீந்திர ஜடேஜா சென்னை அணி மீது மனக்கசப்பில் இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. அத்தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியதற்கும் அதுதான் காரணம் எனவும் கூறப்படுகிறது. சென்னை அணியின் நிர்வாகத்தின்மீது மட்டுமல்லாமல் அவ்வணியின் தலைவர் தோனிமீதும் ஜடேஜா மனக் கசப்பில் இருந்துவருவதாகவும் வழக்கமாக தோனியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லும் ஜடேஜா இம்முறை வாழ்த்துச் சொல்லாததும்கூட அந்த அடிப்படையில்தான் எனவும் கூறப்பட்டுவருகிறது.

அது மட்டுமல்லாமல் ஐபிஎல்லில் ஜடேஜா வேறு அணிக்கு மாறவுள்ளதாகவும்,  சென்னை அணி உடனான தனது கடந்த 2 ஆண்டுகால இன்ஸ்டாகிராம் பதிவுகளை ஜடேஜா நீக்கியிருப்பதும்கூட அதனால்தான் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | தோனியுடன் மீண்டும் வெடித்த மோதல்? CSKவிலிருந்தே ஒட்டுமொத்தமாக விலகுகிறார் ஜடேஜா?

இப்படியான ஒரு நிலையில்தான் ஜடேஜா காயம் தொடர்பாக சென்னை அணி மேற்கண்ட பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறது. ஜடேஜா மீண்டும் சென்னை அணிக்காக விளையாடுவாரா

அல்லது வேறு அணிக்குத் தாவுவாரா எனும் விஷயம் இனிமேல்தான் தெரியவரும்.

மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது நயன்தாரா- NETFLIX விவகாரம்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News