Adelaide Test: டிரிபிள் செஞ்சுரி விளாசிய டேவிட் வார்னர்; Warner 335*

பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டிரிபிள் செஞ்சுரி அடித்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 30, 2019, 01:57 PM IST
Adelaide Test: டிரிபிள் செஞ்சுரி விளாசிய டேவிட் வார்னர்; Warner 335* title=

அடிலெய்ட்: பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 300 ரன்கள் கடந்துள்ளார். இந்த ரன்களை அவர் 389 பந்துகளில் எடுத்தார். மூன்று சதம் அடித்த ஏழாவது ஆஸ்திரேலிய வீரர் ஆவார். மேலும் பகல் - இரவு ஆட்டத்தில் மார்க் டெய்லருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றார். தொடக்க வீரராக களம் இறங்கிய டேவிட் வார்னர் 2 வது நாளாக தொடர்ந்து ஆடி ஆட்டமிழக்காத 335 ரன்களை எடுத்துள்ளார். இந்த ரன்களை அவர் 418 பந்துகளில் எட்டினார். இதே போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் 7,000 ரன்களில் விரைவாக எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று இரண்டாவது போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 3 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலியா டிக்ளர் செய்தது. அதில் டேவிட் வார்னர் மூன்று சதம் அடுத்து 335 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அதேபோல மார்னஸ் லாபுசாக்னே சதம் அடுத்து 162(238) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

டேவிட் வார்னரின் மூன்று சதம் சாதனை:
- பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று சதம் அடித்த 2 வது ஆஸ்திரேலிய வீரர்
- தொடக்க வீரராக மூன்று சதம் அடித்த 4 வது ஆஸ்திரேலியர்
- பாகிஸ்தானுக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் அடுத்த 4 வது பேட்ஸ்மேன்
- ஒட்டுமொத்தமாக மூன்று சதம் அடுத்த 7 வது ஆஸ்திரேலிய வீரர்
- தொடக்க ஆட்டக்காரராக மூன்று சதம் 16 வது பேட்ஸ்மேன்.

அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா வீரர்களின் பட்டியல்:
380  - மத்தேயு ஹேடன் vs ஜிம்பாப்வே; பெர்த் 2003
335 * - டேவிட் வார்னர் vs பாகிஸ்தான்; அடிலெய்ட் டுடே
334 * - மார்க் டெய்லர் vs பாகிஸ்தான்; பேஷ்வர் 1998
334  - டான் பிராட்மேன் vs  இங்கிலாந்து; லீட்ஸ் 1930
329 * - மைக்கேல் கிளார்க் vs இந்தியா; சிட்னி 2012

பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:
365 * - கேரி சோபர்ஸ், கிங்ஸ்டன் 1958
335 * - டேவிட் வார்னர், அடிலெய்ட் டுடே
334 * - மார்க் டெய்லர், பேஷ்வர் 1998
309  - வீரேந்தர் சேவாக், முல்தான் 2004

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் விளையாடி வருகிறது.  முதலில் நடைபெற்ற டி-20 போட்டி தொடரில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்து இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. தற்போது இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News