குல்தீப்புக்கு ஆட்டநாயகன் விருதா? ஐபிஎல்-ஐ வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் போட்டி நிர்வாகிகளை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2022, 02:36 PM IST
  • குல்தீப்புக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டதால் சர்ச்சை
  • சிறப்பாக பந்துவீசிய அக்ஷர் படேலுக்கு கொடுக்காதது ஏன்?
  • ஐபிஎல்-ஐ சரமாரியாக வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
குல்தீப்புக்கு ஆட்டநாயகன் விருதா? ஐபிஎல்-ஐ வறுத்தெடுத்த நெட்டிசன்கள் title=

பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 115 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ஜிதேஷ் சர்மா மட்டும் 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, வார்னர் மற்றும் பிரித்திவி ஷாவின் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் பொல்லார்டு

பவர் பிளேவில் 81 ரன்களை டெல்லி குவித்தது. இந்த ஐபிஎல் போட்டியில் பவர் பிளேவில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்களாகவும் பதிவானது. டெல்லி அணியில் 30 பந்துகளில் வார்னர் 60 ரன்களை எடுத்தார்.

பிருத்திவி ஷா 41 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் சிறப்பாக பந்துவீசிய கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதேபோல் அக்ஷர் படேல், 4 ஓவர்கள் பந்துவீசி வெறும் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆனால், குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்ததுடன் பந்துவீச்சாளர்களின் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

 

ஆனால், போட்டியின் முடிவில் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக மேட்ச் நிர்வாகிகள் அறிவித்தனர். இதற்கு கடும் எதிர்வினையாற்றி வரும் நெட்டிசன்கள், மேட்ச் நிர்வாகிகள் ஆட்டத்தை பார்த்தார்களா? இல்லையா? குல்தீப்புக்கு எப்படி ஆட்டநாயகன் விருது கொடுக்க முடியும்? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். சிறப்பாக பந்துவீசி 10 ரன்களை மட்டுமே கொடுத்த அக்ஷர் படேல் ஆட்டம் அவர்களுக்கு கண்ணுக்கு தெரியவில்லையா?, லாட்டரி சீட்டு போல் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்படுகிறதா? என்றும் வினவியுள்ளனர். அதேநேரத்தில், ஆட்டநாயகன் விருதை அக்ஷர் படேலுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்த குல்தீப் யாதவை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | வார்னரின் அதிரடியால் பஞ்சாப் அணியை பந்தாடியது டெல்லி அணி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News