IND vs AUS T20: இரண்டு அணிகளுக்கும் ஏற்பட்ட பெரிய பின்னடைவு!! நடந்தது என்ன?

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது டி 20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 6 ஆம் தேதி சிட்னி நகரத்தில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 5, 2020, 02:52 PM IST
  • முதல் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
  • ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
  • கேப்டன் ஆரோன் பிஞ்சிற்கு (Aaron Finch) மருத்துவ பரிசோதனை.
  • ஆஷ்டன் அகார் காயம் காரணமாக மீதமுள்ள டி-20 போட்டிகளில் பங்கேற்க முடியாது.
  • இரண்டாவது டி 20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 6 ஆம் தேதி
IND vs AUS T20: இரண்டு அணிகளுக்கும் ஏற்பட்ட பெரிய பின்னடைவு!! நடந்தது என்ன?  title=

Cricket News: ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரின், நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு பெரும் அதிர்ச்சியும் காத்திருந்தது. அதாவது ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். அதேபோல தற்போது ஆஸ்திரேலிய அணிக்கும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஆஷ்டன் ஆகர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். அதே நேரத்தில், கேப்டன் ஆரோன் பிஞ்சிற்கு (Aaron Finch) மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவரின் உடல்நலம் குறித்து இன்னும் அறிக்கை வரவில்லை. பிஞ்ச் விளையாடுவதிலும் சந்தேகம் உள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அளித்த தகவலின்படி, "ஆஷ்டன் அகார் (Ashton Agar) காயம் காரணமாக மீதமுள்ள இரண்டு டி-20 போட்டிகளில் பங்கேற்க முடியாது. அகாருக்குப் பதிலாக நாதன் லியோன் (Nathan Lyon) அணியில் விளையாடப் போகிறார். முதல் போட்டியில் காயமடைந்த பின்னர் கேப்டன் ஆரோன் பிஞ்ச்க்கு (Aaron Finch Injured) ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. ஸ்கேன் முடிவுகளுக்காக காத்திருக்கின்றன. அதன் அடிப்படையில் அவர் டி 20 தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் எனக்கூறியுள்ளனர். இருபது ஓவர் தொடரின் முதல் போட்டியில் அகார் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மிட்செல் ஸ்வெப்சனுக்கு (Mitchell Swepson) வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதல் டி-20 போட்டியில் விராட் கோலியை (Virat Kohli) அவுட் செய்தார் ஸ்வீப்சன்.

ALSO READ | Ind vs Aus 1st T20: இந்தியா வெற்றி, தனது முதல் T20-ல் கலக்கிய தமிழக வீரர் நடராஜன்

ஆஸ்திரேலியாவின் கேப்டன் பிஞ்ச் தொடரிலிருந்து விலகினால், அது அந்த அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும். துணை கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins) டி 20 தொடரில் விளையாடவில்லை. அத்தகைய சூழ்நிலையில், க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) அல்லது ஸ்டீவ் ஸ்மித்துக்கு இந்த பொறுப்பை வழங்க முடியும். பிக் பாஷில் மெல்போர்ன் நட்சத்திரங்களின் கேப்டன் மேக்ஸ்வெல். அவரது தலைமையின் கீழ், அணி கடந்த சீசனில் இறுதிப் போட்டியை எட்டியது. மறுபுறம், முன்பு ஸ்மித் (Steve Smith) ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்தார்.

 

இந்திய அணியைப் பற்றி பேசுகையில், ஜடேஜா காயம் அடைந்தவுடன் வெளியேறியபோது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், "இன்னிங்ஸ் இடைவேளையின் போது, ​​BCCI வாரியத்தின் மருத்துவ குழு ஜடேஜாவை பரிசோதித்தது. அவர் இப்போது மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார், தேவைப்பட்டால் மீண்டும் அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பம். அவருக்கு பதிலாக ஷார்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷர்துல் ஒருநாள் அணியின் இடம் பெற்றிருந்தார். 

ALSO READ | IND vs AUS T20I: கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இந்தியா இழக்கவில்லை.

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது டி 20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 6 ஆம் தேதி சிட்னி நகரத்தில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News