IND vs AUS T20I: கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இந்தியா இழக்கவில்லை.

IND vs AUS: டி 20 போட்டியில் இந்தியாவின் சாதனை சுவாரஸ்யமாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக கங்காரு அணியால் வெல்ல முடியவில்லை.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 3, 2020, 11:21 PM IST
  • மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-2 தோல்வியை தழுவியது இந்திய அணி.
  • டி 20 வடிவத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் சாதனை சிறந்தது.
  • வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் டி நடராஜன் ஆகியோர் பந்துவீச்சில் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.
  • டேவிட் வார்னர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
IND vs AUS T20I: கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் எந்த தொடரையும் இந்தியா இழக்கவில்லை.

Australia vs India, 1st T20I: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-2 தோல்வியை தழுவிய இந்திய அணி, நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சவால் விடலாம். ஏனெனில் டி 20 போட்டியில், இந்தியா மிகவும் சீரான அணியைக் கொண்டுள்ளது.

டி 20 வடிவத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் சாதனை சிறந்தது. கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் (Australia) டீம் இந்தியா எந்த தொடரையும் இழக்கவில்லை. முன்னதாக பிப்ரவரி 2008 இல், இந்தியா இங்கு தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இது மட்டுமல்லாமல், கொரோனா தொற்றுநோய்க்கு முன்னர், இந்தியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்தை தோற்கடித்தது. இதனால் டி-20 போட்டியை பொறுத்தவரை இந்திய அணிக்கு மன உறுதியும் மிக அதிகமாக இருக்கும். ஒருநாள் போட்டிகளில் அற்புதமாக செயல்பட்ட வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் டி நடராஜன் ஆகியோர் பந்துவீச்சில் நல்ல பார்மில் இருக்கிறார்கள். 

ஐ.பி.எல். ​​ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) நல்லமுறையில் பந்து வீசினார். IPL 2020 தொடரில் கேப்டன் விராட் கோஹ்லி பவர் பிளே மற்றும் மிடில் ஓவர்களில் அவரைப் பயன்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் ஹார்திக் பாண்டியாவுடன் (Hardik Pandya) வாஷிங்டன் சுந்தர் சேரும் போது எதிர் அணிக்கு சவால் கொடுக்க முடியும். 

ALSO READ |  AUS vs IND 3rd ODI: தமிழக வீரர் நடராஜனின் அருமையான ஆட்டம்

முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய யார்க்கர் நிபுணர் நடராஜன் (Yorker Specialist T. Natarajan) வெள்ளிக்கிழமை டி 20 கிரிக்கெட்டில் நுழைவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மனுகா ஓவல் (Manuka Oval) ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உதவும் என்று என்பதால், இதுபோன்ற சூழ்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி அல்லது தீபக் சாஹர் ஆகியோருடன் யார் பந்துவீச்சைத் தொடங்குவார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் தோல்வியடைந்த யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal), மீண்டும் நல்ல பார்முக்கு திரும்பி வர முயற்சிப்பார். ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது இடத்தில் இறங்கிய கே.எல்.ராகுல் (KL Rahul), இருபது ஓவர் போட்டிகளில் ஷிகர் தவானுடன் இன்னிங்ஸைத் தொடங்கலாம். 

ஒருநாள் தொடரில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியவில்லை. ஆனால் இப்போது பெரிய ஸ்கோர் செய்ய முயற்சிப்பார். மூன்றாவது ஒருநாள் போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு ஒரு டானிக்காக அமைந்துள்ளது. மறுபுறம், ஒருநாள் தொடரை வென்ற பிறகு ஆஸ்திரேலியா மனஉறுதியுடன் உள்ளது. இருப்பினும் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

ALSO READ |  இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து ICC தலைவர் முக்கிய அறிவிப்பு!

இப்போது மார்னஸ் லாபூஷென் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (Aaron Finch) அல்லது வேறொருவருடன் இறங்குகிறாரா என்பதைப் பார்க்க வேண்டும். மார்கஸ் ஸ்டோனிஸும் இன்னிங்ஸைத் தொடங்கலாம். ஆனால் அவர் ஒருநாள் போட்டியில் காயமடைந்தார். இப்போது அவர் விளையாடுவது கேள்விக்குறியாக உள்ளது. பந்துவீச்சில், மிட்செல் ஸ்டார்க் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகினார். டி-20 போட்டியில் விளையாடலாம். 

இந்தியா: விராட் கோஹ்லி (கேப்டன்), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹார்டிக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யூஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி சாஹர், டி.நடராஜன்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் எகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லாபூசென், க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சைம்ஸ், கென் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மத்தேயு வேட், டார்சி ஷார்ட், ஆடம் சம்பா.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News