புதுடெல்லி: INDIA VS ENGLAND: நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால், ஜூன் 18-22 வரை லார்ட்ஸில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியா குறைந்தது இந்த போட்டியை டிராவாவது செய்ய வேண்டும். எனவே நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மீதான அழுத்தம் அதிகமாகவே இருக்கும்.
டெஸ்ட் போட்டி தொடங்கிய இரண்டு நாட்களுக்குள் Pink Ball Test முடிந்ததும், மோட்டேரா மைதானத்தில் இந்த போட்டிகள் நடத்துவது தொடர்பான பல்வேறு விமர்சனங்களும், ஏராளமான குறைபாடுகளுக்கும் மத்தியில், நான்காவது போட்டி Pink Ball Test போட்டியாக விளையாடும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனால், ஜூன் 18-22 வரை லார்ட்ஸில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியா குறைந்தது இந்த போட்டியை டிராவாவது செய்ய வேண்டும். எனவே நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மீதான அழுத்தம் அதிகமாகவே இருக்கும்.
Also Read | Watch Video: வைரல் ஆன அம்பயரின் ரியாக்ஷன், சலிக்காமல் சிரிக்கும் நெட்டிசன்கள்
"ஒரு நல்ல கடினமான மேற்பரப்பை எதிர்பார்க்கலாம், அது உறுதியானதாகவும், பந்து துள்ளிச் செல்வதாகவும் இருக்கும். பேட்டிங்குக்கு ஏற்றதாகவும் இருக்கும், இது ஒரு பாரம்பரிய Pink Ball Test போட்டியாக இருப்பதால், மார்ச் 4-8 முதல் இங்கு சுவாரசியமான போட்டியை எதிர்பார்க்கலாம்" என்று பி.சி.சி.ஐயின் மூத்த அதிகாரி தெரிவிக்கிறார்.
டி 20 உலகக் கோப்பையின் போது மொட்டோரா மைதானத்தில் நிறைய முக்கியமான போட்டிகளை BCCI நடத்தலாம் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்த நிலையில், இந்த வாய்ப்பை தவறவிட BCCI விரும்பாது என்பது புரிந்துக் கொள்ளக்கூடியது தான்.
"ஒரே இடத்தில் இரண்டு போட்டிகள் விளையாடியிருந்தால், அப்போது விமர்சனங்களை வைக்கலாம். இறுதி டெஸ்ட் முடிவடையட்டும், பின்னர் இது பற்றி பேசுவோம் என்று போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத்தின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே ஐ.சி.சி தனது நடவடிக்கையை தீர்மானிக்க முடியும். இப்போது வரை, இங்கிலாந்து அணி எந்த உத்தியோகபூர்வ புகாரையும் பதிவு செய்யவில்லை” என்று பிசிசிஐ அதிகாரி கூறினார்.
Also Read | Yuvraj Singh: இந்த பிட்ச்ல, அனில் கும்ப்ளே 1000 விக்கெட் எடுப்பாரு…
ஒரே மைதானத்தின் நல்ல மற்றும் மோசமான ஆடுகளம் தொடர்பாக, ஐ.சி.சி எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை. இந்தியா 3-1 என்ற வித்தியாசத்தில் மகிழ்ச்சியான நிலையை எட்டினால், BCCI ஏன் கவலைப்படவேண்டும். அதுமட்டுமல்ல, கிரிக்கெட்டின் மிகவும் முக்கியமான இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் இடத்தை மாற்றி மைதானம் தொடர்பான எதிர்மறையான விமர்சனங்களை பதிக்கவும் இந்திய அணி நிர்வாகம் விரும்பாது.
"இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் நன்றாக சென்றது, பல முன்னணி ஆங்கில கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் ஆடுகளம் இதைப் பற்றி விமர்சிக்கவில்லை. நேரடியான டெலிவரிகளைத் தான் அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை. பி.சி.சி.ஐ அதை நன்கு அறிந்திருக்கிறது" என்றும் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறினார்.
தனிப்பட்ட காரணங்களால் ஜஸ்பிரீத் பும்ரா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அடுத்த டெஸ்டுக்கான அணியும் சுவாரஸ்யமாக இருக்கும்.
இஷாந்த் ஷர்மா அணியில் இருப்பார். உமேஷ் யாதவை விட முகமது சிராஜ் அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது, அதே நேரத்தில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தரின் சிறந்த பேட்டிங் திறன்கள் கடைசி டெஸ்ட் போட்டிக்கான நடுத்தர வரிசையில் மிகவும் எளிதில் வரக்கூடும்.
Also Read | Yusuf Pathan: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR