Yusuf Pathan: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்?

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக யூசுப் பதான் அறிவித்தார். தனது ஓய்வு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட யூசுப் பதான், தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2021, 08:34 PM IST
  • கிரிக்கெட்டர் யூசுப் பதான் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
  • உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றவர் பதான்
  • டி-20 தொடக்க ஆட்டத்தில் பங்கெடுத்தவர் யூசுப்
Yusuf Pathan: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்? title=

புதுடெல்லி: அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக யூசுப் பதான் அறிவித்தார். தனது ஓய்வு அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட யூசுப் பதான், தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதிலும் குறிப்பாக, தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பிப்ரவரி 26ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று யூசுப் பதான் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பரோடாவில் பிறந்த பதான், ஐபிஎல்லில் 174 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

57 ஒருநாள் மற்றும் 22 டி 20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். ஓய்வு  அறிவிப்பை வெளியிட பதான் டிவிட்டரில் வெளியிட்டார்.

“நான் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், குழுவினருக்கும், முழு நாட்டிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் எனக்குக் கொடுத்த முழு ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. எதிர்காலத்திலும் நீங்கள் என்னை தொடர்ந்து ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பதான் தனது ஓய்வு பெறும் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Also Read | கால்பந்து ஜாம்பவான் மரடோனாவை Mosaic Maradonaவாக மாற்றிய அர்ஜெண்டினா

41 ஒருநாள் போட்டிகளில், அவர் சராசரியாக 27 சராசரியாக 810 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும். இந்தியாவுக்காக 18 டி 20 போட்டிகளில் 236 ரன்கள் எடுத்து 146.58 என்ற ஸ்ட்ரைக் வீதத்தை வைத்திருக்கிறார்.  

2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடக்க டி 20 போட்டியில் வெற்றிபெற்ற 2007 டி 20 அணியில் யூசுப் இடம் பெற்றிருந்தார். 38 வயதான யூசுப் பதான் 2011 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News