Yuvraj Singh: இந்த பிட்ச்ல, அனில் கும்ப்ளே 1000 விக்கெட் எடுப்பாரு…

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கு தயாரிக்கப்பட்ட ஆடுகளத்தை இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) பார்வையிட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 26, 2021, 02:36 PM IST
  • இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கு தயாரிக்கப்பட்ட ஆடுகளத்தை இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) பார்வையிட்டார்.
  • இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.
Yuvraj Singh: இந்த பிட்ச்ல, அனில் கும்ப்ளே 1000 விக்கெட் எடுப்பாரு… title=

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தது. சுழற்பந்து வீச்சாளர்கள் 28 விக்கெட்டுகளை எடுத்தனர்.  

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கு தயாரிக்கப்பட்ட ஆடுகளத்தை இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் (Yuvraj Singh) பார்வையிட்டார். இந்த டெஸ்ட் போட்டி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. 30இல் 28 விக்கெட்டுகளை மின்னல் வேகத்தில் சுழற்பந்து வீச்சாளர்களே எடுத்துவிட்டனர். 

இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட் (Joe Root) இந்தியாவின் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது முதல் தர கிரிக்கெட்டில் அவரது முதல் வெற்றிப் பதிவு. இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் (Axar Patel) இங்கிலாந்தின் இரு இன்னிங்ஸிலும் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது இந்திய பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுப் பதிவையும் ஏற்படுத்தினார்.  

ஆடுகளத்தின் நிலை, கிரிக்கெட் நிபுணர்களின் பல்வேறு விதமான கருத்துக்களை எதிர்கொள்கிறது.  அனில் கும்ப்ளேக்கு இத்தகைய ஆடுகளம் கிடைத்த்திருந்தால், அவர் 1,00 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்திருப்பார் என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜனின் கருத்தும் இந்த புதிய ஆடுகளத்திற்கு பாதகமாகவே இருக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்சில் 200 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியா சிக்கலில் சிக்கியிருக்கும் என்று கூறினார். “இது ஒரு சிறந்த பிட்ச் அல்ல. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 200 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியாவும் சிக்கலில் சிக்கியிருக்கும். இரு தரப்பினருக்கும் பிட்ச் ஒன்றுதானே?”என்று ஹர்பஜன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

ALSO READ | IND vs ENG 3rd Test: இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News