பஞ்சாப்பின் அதிரடியில் பஞ்சாய் பறந்த ஆர்.சி.பி!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.  

Written by - RK Spark | Last Updated : May 13, 2022, 11:27 PM IST
  • பேட்டிங்கில் அதிரடி காட்டிய பஞ்சாப்.
  • பவர் பிளேயில் 80 ரன்கள் குவிப்பு.
  • மீண்டும் பேட்டிங்கில் சொதப்பிய ஆர்.சி.பி
பஞ்சாப்பின் அதிரடியில் பஞ்சாய் பறந்த ஆர்.சி.பி! title=

ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.  மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.  பிளே ஆப்பிள் நுழைய இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டி என்பதால் விறுவிறுப்பு அதிகமாக இருந்தது.  புள்ளி பட்டியலில் ஆர்சிபி 4வது இடத்திலும், பஞ்சாப் 8வது இடத்திலும் இருந்தது.  

 

மேலும் படிக்க | பிறந்தநாளில் சிஎஸ்கேவுக்கு எதிராக பொல்லார்டு விளையாடாதது ஏன்? பின்னணி

முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டியது.  பேர்ஸ்டோவ் மற்றும் தவான் நாலாபுறமும் பவுண்டரிகளை சிதறவிட்டனர்.  தவான் 21 ரன்களுக்கும், ராஜபக்சா 1 ரன்களுக்கும் வெளியேற பின்பு ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன் மற்றும் பேர்ஸ்டோவ் ஆர்.சி.பி பவுலர்களை அடித்து துவம்சம் செய்தனர்.  பஞ்சாப் அணி பவர் பிளே முடிவதற்குள் 80 ரன்களை எட்டியது.  பேர்ஸ்டோவ் 29 பந்துகளில் 7 சிக்ஸர் 4 பவுண்டரில் உட்பட 66 ரன்கள் விளாசினார்.  மறுபுறம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் 4 சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 70 ரன்களை குவித்தார்.  பஞ்சாப் அணிக்கு கடைசியில் அடுத்தது விக்கெட்கள் வில 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 209 ரன்கள் குவித்தது.  ஆர்சிபி அணியில் ஹர்சல் படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களமிறங்கிய ஆர்சிபி அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடியது.  3 ஓவர்களுக்கு 30 ரன்கள் அடித்த நிலையில் கோலி மற்றும் பாப் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் ஆகி வெளியேறினர்.  சிறிது நேரம் தாக்கு பிடித்த படிதார் மற்றும் மாக்ஸ்வேலும் பெவிலியன் திரும்பினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் 11 ரன்களில் வெளியேறினார்.  ஆர்சிபி வீரர்கள் அடுத்தது அவுட் ஆனதால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 155 ரன்கள் மட்டுமே அடித்தது.  இதனால் பஞ்சாப் அணி இந்த போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | அடுத்த விராட் கோலி இவர் தான் - ரோகித்சர்மா கூறும் வீரர் யார்?  

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News