பிளே ஆஃப்பை உறுதி செய்தது ஆர்ஆர்! சென்னை மீண்டும் தோல்வி!

சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : May 20, 2022, 11:13 PM IST
பிளே ஆஃப்பை உறுதி செய்தது ஆர்ஆர்! சென்னை மீண்டும் தோல்வி! title=

ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.  மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  சென்னனை அணி பிளே ஆப் போட்டியில் இருந்து ஏற்கனவே வெளியேறி உள்ளது.  இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி தனது பிளே ஆப் கனவே உறுதி செய்து கொள்ளும்.  மேலும் இந்த போட்டியுடன் தோனி ஓய்வு பெறுவார் என்று பேச்சு எழுந்த நிலையில், அடுத்த ஆண்டும் விளையாடுவேன் என்று உறுதி அளித்துள்ளார்.  

 

மேலும் படிக்க | மும்பைக்கு ஐஸ் வைக்கும் டூபிளசிஸ் - இதற்கு தானா?

சிறந்த ஓப்பனிங் பேட்டிங் என்று சொல்லும் அளவிற்கு இருந்த சென்னை அணியின் ஓப்பனிங் பேஸ்ட்மேன்கள் இருவரும் அடுத்தது அவுட் ஆகி வெளியேறினர்.  கெய்குவாட் 2 ரன்களிலும், கான்வே 16 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர்.  பின்பு வந்த மொயின் அலி பேட்டிங்கில் ஒரு சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  போல்ட் ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளை விளாசினார்.  மறுபுறம் சிஎஸ்கே அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்களும் சரிந்தது. தோனி மற்றும் மெயின் அலி ஜோடி சேர்ந்து சென்னை அணிக்கு ரன்களை சேர்ந்தனர்.   இருப்பினும் சென்னை அணியின் ரன் ரேட் படிப்படியாக குறைந்தது.  முதல் 6 ஓவரில் 75 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்த சென்னை, அடுத்த 14 ஓவரில் 75 ரன்கள் மட்டுமே அடித்து 5 விக்கெட்களை இழந்தது.  20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் அடித்தது.

 

பின்பு களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பட்லர் ஆரம்பத்திலேயே அவுட் ஆகி வெளியேறினார்.  கேப்டன் சஞ்சு சாம்சனும் 15 ரன்களில் அவுட் ஆனார்.  பின்பு ஜோடி சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜெய்ஸ்வால் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.  ஜெய்ஸ்வால் 59 ரன்களும், அஸ்வின் 40 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தனர்.  ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 151 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.  இதனால் புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.  

 

மேலும் படிக்க | அடுத்த ஆண்டு விளையாடுவேனா? தோனியின் அசரவைக்கும் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News