எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். இதுவரை 4 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணிக்காக பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்து இருந்தார் தோனி, அதன் பிறகு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு தோனி ஓய்வு பெறப் போகிறார் என்ற செய்தி வெளியானவுடன் அவரிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு "Defenetly Not" என்று பதிலளித்திருந்தார்.
மேலும் படிக்க | தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடும் தோனி?
பிறகு கடந்த ஆண்டும் இதே கேள்வி தோனியிடம் முன்வைக்கப்பட்டது, அதற்கும் நான் அடுத்தாண்டு கண்டிப்பாக விளையாடுவேன் என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு தனது கேப்டன்சி பதவியை ஜடேஜா விடம் ஒப்படைத்தார் தோனி. இதன் காரணமாக தோனி இந்த வருடத்துடன் ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்ற கணிப்பு அனைவருக்கும் வந்தது. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன்சி பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார் ஜடேஜா. இருப்பினும் இந்த வருட ஐபிஎல் பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறாமல் சென்னை அணி வெளியேறி உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி உடன் மோதுகிறது. இந்த போட்டியுடன் தோனி தனது ஓய்வை அறிவிக்கப் போகிறார் என்ற தகவல் கடந்த சில தினங்களாக வெளியானது. கடந்த ஆண்டு ஒரு நேர்காணலில், கண்டிப்பாக எனது கடைசி போட்டி சென்னையில் தான் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும், ஐபிஎல் 2023ல் விளையாடுவீர்களா என்று இதற்கு முன் கேட்கப்பட்ட போது, விளையாடுவேன் ஆனால் அது அணியின் உள்ளேயா என்பது தெரியாது என்று சூசகமாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று இது குறித்து பேசிய தோனி கண்டிப்பாக அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். "கண்டிப்பாக சென்னைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது அநியாயம், சென்னை ரசிகர்களுக்கு அப்படி செய்வது நன்றாக இருக்காது, அடுத்த ஆண்டு நிச்சயம் விளையாடுவேன்" என்று தெரிவித்துள்ளார். இதனால் தற்போது தோனியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய அம்பயர்! கடுப்பாகி பேட்டை உடைத்த மேத்யூ வேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR