ஐபிஎல் 2022: ரெக்கார்டுடன் கொல்கத்தாவை வெற்றி பெறவைத்த கம்மின்ஸ் - மும்பை பரிதாபம்

ஐபிஎல்லில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையுடன் கொல்க்கத்தா அணியை பாட் கம்மின்ஸ் வெற்றி பெற வைத்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2022, 11:31 PM IST
  • மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா அணி
  • 3வது போட்டியில் தொடர்ச்சியாக தோல்வி
  • பாட் கம்மின்ஸ் ஐபிஎல் போட்டியில் சாதனை
ஐபிஎல் 2022: ரெக்கார்டுடன் கொல்கத்தாவை வெற்றி பெறவைத்த கம்மின்ஸ் - மும்பை பரிதாபம் title=

ஐபிஎல் 2022-ல் 14 லீக் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய மும்பை முதல் 2 போட்டிகளில் விளையாடியதுபோலவே இந்தப் போட்டியிலும் தடுமாற்றதுடன் தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஐபிஎல்லில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 12 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். 

மேலும் படிக்க | IPL2022: கூர்தீட்டிய கோலியை காலி செய்த முன்னாள் RCB வீரர் - சாம்சனின் சாமார்த்தியம்

இஷான் கிஷன் 21 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க, பிரெவிஸ் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். இந்த ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், 36 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக திலக் வர்மா 27 பந்துகளில் 38 ரன்கள் விளாசினார். இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய பொல்லார்டு கொல்கத்தா பந்துவீச்சை வாண வேடிக்கை காட்டினார். 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட 22 ரன்கள் விளாசினார். 

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியும் தொடக்கத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. ரஹானே 7 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய சாம்பில்லிங்ஸ் 17 ரன்கள் மற்றும் நிதீஷ் ராணா 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 51 ரன்கள் விளாசி, கடைசி வரை களத்தில் இருந்தார்.

15வது ஓவர் வரை மேட்ச் வின்னிங் செய்ய வாய்ப்பு இருக்கிறது என நினைத்த மும்பையின் கனவை களத்தில் இறங்கிய அடுத்த நிமிடத்தில் இருந்து சுக்குநூறாக உடைத்தார் கம்மின்ஸ். பந்துகளை விளாசி வாண வேடிக்கைகளாக பறக்க விட்ட கம்மின்ஸ், கொல்கத்தாவை ஈஸியாக வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 16 ஓவரில் மட்டும் 35 ரன்களை வாரி வழங்கினார் மும்பை வீரர் சாம்ஸ். அதேநேரத்தில் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த கே.எல்.ராகுலின் சாதனையை கம்மின்ஸ் சமன்செய்தார். இந்த போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.  மொத்தம் 15 பந்துகளை எதிர்கொண்ட கம்மின்ஸ் 4 பவுண்டரிகளையும், 6 மெகா சிக்சர்களையும் விளாசி மொத்தம் 56 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. 

மேலும் படிக்க | KKRvsMI:முதல் வெற்றிக்காக மும்பை அணியில் களமிறங்கும் அதிரடி பேட்ஸ்மேன் - ரோகித் மாஸ்டர் பிளான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News