IPL2022: கூர்தீட்டிய கோலியை காலி செய்த முன்னாள் RCB வீரர் - சாம்சனின் சாமார்த்தியம்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் பெங்களுரு அணி அபாரமாக வெற்றி பெற்றது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2022, 04:59 PM IST
  • ராஜஸ்தான் அணியை அபாரமாக வீழ்த்திய பெங்களூரு அணி
  • விராட் கோலி 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்
  • விராட் கோலியை வீழ்த்த சஞ்சுசாம்சன் பயன்படுத்திய ஆயுதம்
IPL2022: கூர்தீட்டிய கோலியை காலி செய்த முன்னாள் RCB வீரர் - சாம்சனின் சாமார்த்தியம்  title=

ஐபிஎல் 2020-ல் 13வது லீக் போட்டியில் பெங்களூரு அணி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில், பெங்களுரு அணி அபாரமாக வெற்றி பெற்றது. இருப்பினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேபடன் சஞ்சு சாம்சனின் சில முடிவுகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. குறிப்பாக, ஆர்சிபி அணியில் விராட்கோலியின் துருப்புச் சீட்டாக இருந்த பவுலரையே, அவருக்கு எதிரான ஆயுதமாக ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் பயன்படுத்தியது தான் ஹைலைட். 

மேலும் படிக்க | காருக்குள் சச்சினின் ஜாலியோ ஜிம்கானா - வைரல் வீடியோ

கோலியின் துருப்புச் சீட்டு

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் வீரராக இந்த ஐபிஎல் போட்டியில் விராட் கோலி விளையாடி வருகிறார். அவரின் ஆட்டத்தை ஆர்வமாக பலரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில், தொடர்ந்து சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்து வருகிறார். கேப்டன் பொறுப்பில் இல்லாததால் பழைய ஆக்ரோஷத்தை காண முடியவில்லையே என்றுகூட ரசிகர்கள் ஏங்கத் தொடங்கிவிட்டனர். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அதுவே நடந்தது. பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அவரை ஆட்டமிழக்க செய்தவர் யுஸ்வேந்திர சாஹல். இருவரும் கடந்த ஆண்டு வரை ஆர்சிபி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு எதிரெதிர் அணியில் விளையாட வேண்டிய சூழல். விராட்கோலி பேட்டிங் செய்தபோது சாஹலை பந்துவீச அழைத்த சாம்சன், இருவரும் சிறப்பாக செயல்பட்டு கோலியை ரன் அவுட்டும் செய்தனர். 

சாஹலை சீண்டாத ஆர்சிபி

கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியவுடன், இந்த ஆண்டு புதிய அணியை அந்த அணி கட்டமைக்க தொடங்கியது. அதனால், சாஹல் உள்ளிட்ட வீரர்களை விடுவித்த ஆர்சிபி, அவரை ஏலத்தில் எடுக்க ஒருமுறை கூட ஆர்வம் காட்டவில்லை. இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி ராஜஸ்தான் அணி சாஹலை 6.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

ராஜஸ்தான் vs பெங்களூரு

முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 169 ரன்கள் குவித்தது. கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடியது போலவே இந்தப் போட்டியில் பட்லர் வெளுத்து வாங்கினார். பின்னர் சேஸிங் செய்த பெங்களுரு அணி ஒரு கட்டத்தில் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது. பின்வரிசையில் களமிறங்கிய ஷபாஸ் அகமது மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியால் பெங்களுரு அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டி அசத்தியது. 

மேலும் படிக்க | தோனிதான் அணியை வழிநடத்துகிறாரா? ஜடேஜாவின் பதில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News