KKRvsMI:முதல் வெற்றிக்காக மும்பை அணியில் களமிறங்கும் அதிரடி பேட்ஸ்மேன் - ரோகித் மாஸ்டர் பிளான்

நடப்பு சாம்பியனாக இருந்தாலும், முதல் வெற்றிக்கா மும்பை இந்தியன்ஸ் அணி போராடி வருகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 6, 2022, 05:27 PM IST
  • கொல்கத்தா அணியை வீழ்த்த மும்பை அணி வியூகம்
  • அதிரடி பேட்ஸ்மேன் மும்பையில் அணியில் களமிறங்குகிறார்
  • ரோகித் சர்மாவின் மாஸ்டர் பிளான் கை கொடுக்குமா?
KKRvsMI:முதல் வெற்றிக்காக மும்பை அணியில் களமிறங்கும் அதிரடி பேட்ஸ்மேன் - ரோகித் மாஸ்டர் பிளான் title=

இந்த ஐபில் தொடரில் மும்பை அணி முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதால், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா. இதற்காக முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்காத அதிரடி பேட்ஸ்மேனை இன்றைய போட்டியில் களமிறக்க உள்ளார். 

மேலும் படிக்க | IPL2022: கூர்தீட்டிய கோலியை காலி செய்த முன்னாள் RCB வீரர் - சாம்சனின் சாமார்த்தியம் 

கொல்க்கத்தா vs மும்பை

ஐபிஎல் 2022 தொடரின் 14வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் மூலம் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. தொடக்க போட்டிகளில் வெற்றி பெற்று கம்பீரமான அணியாக இருக்கும் கொல்கத்தாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது இல்லை என்பதால், அதற்கான மாஸ்டர் பிளான் ஒன்றை வகுத்துள்ளார் கேப்டன் ரோகித் சர்மா. முதல் இரண்டு போட்டிகளில் களம் இறங்காத வீரரை, இப்போட்டியில் களமிறக்க உள்ளார். 

மும்பையின் அதிரடி வீரர்

கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் சூர்ய குமார் யாதவ், கொல்க்கத்தா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குகிறார். முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இதனால், மிடில் ஆர்டரில் சரியான வீரர் இல்லாமல் மும்பை அணி தடுமாறியது. 2 போட்டிகளில் தோல்வியையும் சந்திக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், சூர்யகுமார் யாதவ் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது, அந்த அணிக்குள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

ஆபத்தான பேட்ஸ்மேன்

சூர்ய குமார் யாதவ், டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பிளேயர்களைப்போல் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விளாசக்கூடியவர். 360 டிகிரி பிளேயர்களில் ஒருவராக இருக்கும் இவர், போட்டியின் போக்கை எந்த நேரத்திலும் மாற்றக்கூடியவர். இதனால், கடந்த 2 போட்டிகளில் தோல்வியடைந்த மும்பை, இவரின் வருகையால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏன் விளையாடவில்லை? 

கடந்த பிப்ரவரியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது சூர்யகுமார் யாதவ் காயமடைந்தார். இதனால், தொடரில் இருந்து வெளியேறிய அவர், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்து வந்தார். இப்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்திருக்கும் அவர், ஐபிஎல் களத்துக்கு திரும்பியிருக்கிறார். இதுவரை 114 ஐபிஎல் போட்டிகளில் 99 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் அவர், 2341 ரன்கள் குவித்துள்ளார். இதில் 13 அரைசதங்கள் விளாசியுள்ளார். 

மேலும் படிக்க | தோனிதான் அணியை வழிநடத்துகிறாரா? ஜடேஜாவின் பதில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News