அடுத்த ஆண்டு முழுவதும் இந்திய அணி விளையாட உள்ள போட்டி விவரங்கள்!

இந்திய அணி அடுத்த ஆண்டு முழுவதும் ஓய்வே இல்லாமல் விளையாட உள்ளது  

Written by - RK Spark | Last Updated : Nov 17, 2021, 01:30 PM IST
அடுத்த ஆண்டு முழுவதும் இந்திய அணி விளையாட உள்ள போட்டி விவரங்கள்! title=

2021 உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து முடிந்தது.  இதில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.  ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றியது.   தற்போது இந்திய வந்துள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.  இந்த போட்டிகள் முடிந்த பிறகு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் இந்திய அணி சவுத் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.   அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.  

india

அதன் பின், பிப்ரவரியில் மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் விளையாடுகின்றன.   இந்த போட்டிகள் முடிந்த பிறகு ஸ்ரீலங்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  2 டெஸ்ட் மற்றும் 3 டி20களில் இந்தியாவில் விளையாட உள்ளது.   அதன்பின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது.  இந்த வருடம் மொத்தம் 10 அணிகள் ஐபிஎல்-ல் விளையாடுகின்றன.  

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு ஜூன் மாதம் சவுத் ஆப்ரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  5 டி20 போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளது.  அதன் பின் ஜுலை மாதம் இந்தியா இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.  அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  மேலும் இந்த வருடம் நடக்காமல் போன கடைசி டெஸ்ட் போட்டியும் அங்கு நடைபெற உள்ளது.  இதன் பின்பு 2022 உலக கோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.  

Team India Fixtures - BCCI

ALSO READ ரோஹித் சர்மா தலைமையில் இளம் இந்திய அணி! நியூஸிலாந்தை பழி தீர்க்குமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News