IPL 2021: SRH vs CSK போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் அணியை 6 விக்கெடுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 30, 2021, 11:08 PM IST
IPL 2021: SRH vs CSK போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி  title=

ஷார்ஜாவில்  நடைபெற்ற ஐபில் 2021ஆம் ஆண்டின் 44வது போட்டியில் இறுதி ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்தது. 

சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போட்டியின் கடைசி ஓவரில் வென்றது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்தது.  

இந்த போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி தகுதி சுற்றுக்குள் நுழைந்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது.

முன்னதாக  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்கள் எடுத்தார். கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நன்றாக விளையாடினாலும், 100 ரன்கள் எடுத்த பிறகு அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்ததால், போட்டி பரபரப்பாக இருந்தது. முன்னதாக, டாஸ் வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா அதிகபட்சமாக 46 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார், சன் ரைசர்சின் வேறு எந்த வீரரும் 18 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. 

 

ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். சாம் குரானுக்கு பதிலாக டுவைன் பிராவோ களம் இறங்கினார்.  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது வீரர்கள் பட்டியலில் எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை.

Also Read | சென்னையிடம் தோற்றால் ப்ளே ஆஃப் சுற்று தகுதியை இழக்கும் SRH

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

https://www.facebook.com/ZeeHindustanTamil
https://twitter.com/ZHindustanTamil

Trending News