பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 2022 - வார்னேவுக்கு நினைவஞ்சலி

ஐபிஎல் 2022 மும்பை வான்கடே மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2022, 07:57 PM IST
  • பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 2022
  • சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்
  • ஷேன் வார்னேவுக்கு நினைவஞ்சலி
பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 2022 - வார்னேவுக்கு நினைவஞ்சலி title=

கிரிக்கெட் தொடர்களில் உலகின் மிகப்பெரிய லீக் தொடரான ஐபிஎல் 2022 மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் கடந்த ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு மீண்டும் இந்தியாவில் தொடங்கியுள்ளது. 

மேலும் படிக்க | மும்பை அணி ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாதா? இதுதான் காரணம்

கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையையொட்டி மும்பை மற்றும் அதனை சுற்றியிருக்கும் மைதானங்களில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. வீரர்களுக்கும், அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிசிசிஐ, இதனை மீறுவோருக்கு போட்டியில் விளையாட தடையும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதற்கிடையே, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முதல் ஐபிஎல் போட்டி மும்பையில் தொடங்கியது. 

இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். தோனி, முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரராக விளையாடுகிறார். மறுபுறம் கொல்கத்தா அணியும் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் களமிறங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. போட்டிக்கு முன்னதாக, அண்மையில் மறைந்த சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு ஐபிஎல் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, அவரது தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற காணொளியும் மைதானத்தில் ஒளிபரப்பு செய்து, ஷேன் வார்னேவை நினைவு கூர்ந்தனர். 

மேலும் படிக்க | தோனியின் நிறைவேறாத கனவை நனவாக்கப்போகும் 3 வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News