தோனியின் நிறைவேறாத கனவை நனவாக்கப்போகும் 3 வீரர்கள்

தோனியின் நிறைவேறாத கனவை நனவாக்கப்போகும் 3 அதிரடி வீரர்கள் இவர்கள் தான். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2022, 02:22 PM IST
  • 5வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா? சென்னை அணி
  • பிளேயராக விளையாட இருக்கிறார் மகேந்திரசிங் தோனி
  • முதல் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதல்
தோனியின் நிறைவேறாத கனவை நனவாக்கப்போகும் 3 வீரர்கள் title=

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை அணி, 9 முறை ஐபில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், சென்னை அணியை விட குறைவான முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற மும்பை அணி 5 முறை சாம்பியன் படத்தை வென்று அசத்தியுள்ளது. இதனால், சென்னை அணி அந்த சாதனையை சமன் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த சாதனையை தோனிக்கு பெற்றுக் கொடுக்க சென்னை அணியின் துருப்புச்சீட்டாக 3 பேர் உள்ளனர். 

மேலும் படிக்க | சாதனையுடன் ஐபிஎல் போட்டியை தொடங்கும் ரவீந்திர ஜடேஜா

ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை அணியின் சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேனாக இருப்பவர் ருதுராஜ் கெய்க்வாட். தொடக்க வீரராக களமிறங்கும் அவர் கடந்த 2 தொடர்களில் சென்னை அணி அதிக போட்டிகள் வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2021 ஆம் ஆண்டு அவருக்கு மிகச்சிறந்த ஐபிஎல் போட்டியாக அமைந்தது. இந்த தொடரின் மூலம் இந்திய அணிக்கு களமிறங்கும் வாய்ப்பும் அவருக்கு தேடி வந்தது. 14 போட்டிகளில் 636 ரன்கள் விளாசினார். இதில் ஒரு சதமும் அடங்கும். 

ரவீந்திர ஜடேஜா

சென்னை அணியின் ஆஸ்தான வீரராக இருந்து இப்போது கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.  பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஜொலிக்கும் ஜடேஜா, வேகமாக பந்துவீசுவதில் வல்லவர். அவர் ஓவர் தொடங்குவதும், முடிப்பதும் அவ்வளவு வேகமாக இருக்கும். அதேநேரத்தில் கச்சிதமாகவும் பந்துவீசக்கூடியவர். இந்தமுறை கூடுதலாக கேப்டன் பொறுப்பையும் ஏற்றிருபதால், இன்னும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தீபக் சாஹர்

கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தீபக் சாஹர். பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் ஜொலிக்கிறார். தோனியின் நம்பிக்கைக்குரியவராக இருப்பதால், இந்த முறை சுமார் 14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவர் மீது தோனி வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் ஐபிஎல் போட்டிக்கு தயாராகி வருகிறார் தீபக் சாஹர். 

மேலும் படிக்க | தோனியின் இந்த செயலால் வருத்தமான ரசிகர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News