இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? இருவருக்கு இடையே கடும்போட்டி

இந்திய அணியின் புதிய வேகபந்துவீச்சு பயிற்சியாளர் தேர்வில் ஜாகிர்கான் மற்றும் அஜித் அகார்கர் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 23, 2022, 10:36 AM IST
  • இந்திய அணிக்கு புதிய வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்
  • ஜாகீர்கான் மற்றும் அஜித் அகார்கரிடையே போட்டி
  • ரேஸில் முந்தப்போவது யார்? - பிசிசிஐ எடுக்கப்போகும் முடிவு
இந்தியாவின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் யார்? இருவருக்கு இடையே கடும்போட்டி title=

கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ராஜினாமா செய்தார். ராகுல் சாஸ்திரிக்கு பதிலாக ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் தற்போது இந்திய அணி நிர்வாகம் பந்துவீச்சு பயிற்சியாளரை மாற்றுமாறு பிசிசிஐயிடம் கோரியுள்ளது. 

மேலும் படிக்க | ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து தினேஷ் கார்த்திக் கேள்வி!

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு நன்கு தயாராகும் வகையில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சு பயிற்சியாளரை நியமிக்க அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளது. பராஸ் மம்ப்ரே 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால், இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பராஸ் மம்ப்ரே நீண்ட காலமாக ராகுல் டிராவிட்டுடன் இணைந்து இளம் வீரர்களை என்சிஎம்மில் உருவாக்கி வருகிறார். ரவி சாஸ்திரி மற்றும் அவரது பயிற்சியாளர் குழு ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்று முடிவு செய்த பின்னர் ராகுல் டிராவிட் மற்றும் பராஸ் மம்ப்ரே ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. 

புதிய வேகப்பந்துவீச்சு பயிற்சியாளர் ரேஸில் ஜாகிர்கான் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் உள்ளனர். அஜித் அகர்கர் 26 டெஸ்ட், 191 ஒருநாள் மற்றும் 4 டி20 சர்வதேச போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதன்முறையாக ஐபிஎல் 2022-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாகீர் கான் தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாக பொறுப்பில் உள்ளார். அவர் 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 610 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த இருவரில் யாரேனும் ஒருவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஸ்ரீலங்கா தொடரில் இருந்து முக்கிய வீரர்கள் விலகல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News