உயிருடன் இருக்கும் போதே கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி - ரூ.40 லட்சம் சொத்தை விற்று கைவரிசை !

DEATH CERTIFICATE : மனைவியை கைது செய்ய வேண்டியும்  உயிருடன் இருக்கும் போதே எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் கணவர் மனு

Written by - Gowtham Natarajan | Last Updated : Sep 20, 2022, 01:59 PM IST
  • கணவரின் சொத்தை வேறு நபருக்கு விற்ற மனைவி
  • சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையான அதிகாரிகள் !
  • கொலை மிரட்டல் விடுவதாக மனைவி மீது புகார்
உயிருடன் இருக்கும் போதே கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி - ரூ.40 லட்சம் சொத்தை விற்று கைவரிசை ! title=

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சந்திரசேகருக்கும், காரைக்குடியைச் சேர்ந்த நதியா ஸ்ரீ என்பவருக்கும், கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில், நதியா ஸ்ரீ தனது கணவர் உயிருடன் இருக்கும் போதே, இறந்து விட்டதாக கூறி காரைக்குடி நகராட்சியில் பதிவு செய்து இறப்புச் சான்றிதழும், வருவாய்த்துறை மூலம் வாரிசு சான்றிதழும் பெற்றிருக்கிறார். அதை வைத்து சந்திரசேகர் பெயரில் உள்ள 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்து உள்ளார். அதன் பிறகு, காலம் கடந்திட, நடப்பாண்டில், தனது பெயரில் உள்ள இந்த இடத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தபோது, தனது மனைவி தனக்கு இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெற்று ஏற்கனவே இடத்தை வேறு நபருக்கு விற்பனை செய்தது சந்திரசேகருக்கு தெரியவந்தது. 

கண்டனூர்,உயிருடன் இருக்கும் போதே கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ்,கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ்,இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி, கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி,ரூ.40 லட்சம்,40 லட்சம் ரூபாய் சொத்து,ம

அதிர்ச்சியடைந்த சந்திரசேகர் தனது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், நேரில் புகார் மனு கொடுத்துள்ளார். கண்டனூர்,உயிருடன் இருக்கும் போதே கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ்,கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ்,இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி, கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி,ரூ.40 லட்சம்,40 லட்சம் ரூபாய் சொத்து,ம

ஆனால், அந்த மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தான் உயிருடன் இருக்கும் போதே, சட்ட விரோதமாகப் பணம் கொடுத்து, இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று, தனது சொத்தை விற்ற நதியா ஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க சென்றார். மனுவில், தனது மனைவியின் தரப்பு தொடர்ந்து தன்னை மிரட்டுவதாகவும், அவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கண்டனூர்,உயிருடன் இருக்கும் போதே கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ்,கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ்,இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி, கணவர் இறந்து விட்டதாகக் கூறி இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி,ரூ.40 லட்சம்,40 லட்சம் ரூபாய் சொத்து,ம

இதனை அறிந்து கொண்ட அதிகாரிகள் சிலர் சந்திரசேகர் மனு பதிவு செய்யும் இடத்தில் வைத்தும் அந்த மனுவைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் காரைக்குடிக்கு வாருங்கள் உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, பதிவு செய்யாமல் மனுவை எடுத்துச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தபோது மீண்டும் மனுவை பதிவு செய்ய சொல்லி, மனுவை பெற்றுக் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், சந்திரசேகர் மனைவியின் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறுதியளித்தார். 

மேலும் படிக்க | கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சிறுவன்!

மக்களுக்காக பணிபுரியும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து ஊழலில் ஈடுபடுவதும், உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கு இறப்பு, வாரிசு வழங்கி, ஊழலுக்குத் துணை போனதும் சிவகங்கையில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த நர்ஸ்: இறந்து பிறந்த குழந்தை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News