டவ்-தே புயல்: 5600 படகுகள் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை; கடலோர காவல்படை தகவல்

கடுமையான சூறாவளியான Tauktae புயலில்,  இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும்,  5,600 படகுகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 16, 2021, 08:01 PM IST
  • கடலோர காவல் படை, ரிமோட் ஆப்பரேட்டிங் ஸ்டேஷன்கள் மூலம் மீனவர்களுக்கு வானொலியில் இந்திய மொழிகளில் வானிலை எச்சரிக்கை.
  • மீனவர் சங்கங்கள் சூறாவளி குறித்து முன்னெச்செரிக்கை தகவல்களை வெளியிட்டு, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
டவ்-தே புயல்: 5600 படகுகள் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை; கடலோர காவல்படை தகவல் title=

டவ்-தே புயல் மே 18 செவ்வாய்க்கிழமை காலை குஜராத் கடற்கரைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறும் நிலையில், கடுமையான சூறாவளியான Tauktae புயலில்,  இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனவும்,  5,600 படகுகள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் லட்சத்தீவு தீவுகளை புயல் தாக்கியுள்ள நிலையில், புயலினால்  உயிர் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. 

கடலோர காவல் படை, ரிமோட் ஆப்பரேட்டிங் ஸ்டேஷன்கள் மூலம் மீனவர்களுக்கு வானொலியில் இந்திய மொழிகளில் வானிலை எச்சரிக்கை செய்திகளை தொடர்ந்து வெளியிடுகின்றன. துறைமுக அதிகாரிகள், ஆயில் ரிக் ஆபரேட்டர்கள், கப்பல் போக்குவரத்து, மீன்வள அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்கங்கள் சூறாவளி குறித்து முன்னெச்செரிக்கை தகவல்களை வெளியிட்டு, ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

40 கடலோர காவல்படை பேரிடர் நிவாரண குழுக்கள், படகுகள், லைஃப் ஜாக்கெட்டுகள் ஆகியவற்றுடன் மேற்கு கடற்கரையில் பேரழிவு மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராக காத்திருக்கின்றன. மருத்துவ அணிகள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ALSO READ | அரபிக் கடல் பகுதியில் புயல் அபாயம்: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!

 

மே 11 அன்று, லட்சத்தீவு பிராந்தியத்திற்கு அருகே ஒரு புயல் உருவாகும் அறிகுறிகள் ட்னோன்றிய போது, ​​லட்சத்தீவு தீவுகள் மற்றும் அருகிலுள்ள கடலோர பகுதிகள் உட்பட மேற்கு கடற்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடலோர காவல் படை மேற்கொண்டது. குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தென் கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்றைய தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கோவா கடற்கரை பகுதியில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழையை கொடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ALSO READ | டவ்-தே புயல் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை மையம் எச்சரிக்கை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News