தென் கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்றைய தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது கோவா கடற்கரை பகுதியில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் குஜராத், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழையை கொடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் நாளை மறுநாள் குஜராத்தின் போர்பந்தர்- நலியா இடையே கரையை கடக்கும். இந்த டவ்-தே புயல் (Cyclone Tauktae) அரபிக் கடலில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ளது. இந்த நிலையில் தமிழகம் (Tamil Nadu), குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த சூறாவளியுடன் தமிழகம் உள்பட மாநிலங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ALSO READ | அரபிக் கடல் பகுதியில் புயல் அபாயம்: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூரில் 18 செ.மீ. மழை பெய்துள்ளது. நடுவட்டம், சின்கோனா ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழையும், சிவலோகத்தில் 8, சுருளக்கோடு, சிற்றார், கூடலூர் பஜார், பெருஞ்சாணி, புத்தர் அணை ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
இந்த புயல் குஜராத் கடற்கரையை 175 கி.மீ வேகத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும், ஜுனகத் மற்றும் கிர் சோம்நாத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடும், மேலும் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் டியு மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யும். போர்பந்தர், தேவ்பூமி துவாரகா, அம்ரேலி, ராஜ்கோட், ஜாம்நகர் ஆகிய மாவட்டங்களில் அடைமழை பொழியும்.
குறிப்பாக சவுராஷ்டிரா மாவட்டங்களான தேவ்பூமி துவாரகா, கட்ச், போர்பந்தர், ஜுனகத் போன்ற மாவட்டங்களில் சூறாவளி புயல் அதிக சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் குஜராத் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR