அரபிக் கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் அங்கு தற்போது புயலாக வலுப்பெற்று வருகிறது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் (Cyclone) சின்னம் காரணமாக தமிழகத்தில் (Tamil Nadu) 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் நாளை இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்.
சென்னையில் சில இடங்களில் மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதே போல தென் மேற்கு அரபிக் கடல்பகுதியிலும் சூறைக்காற்று வீசும். அதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
இந்நிலையில் அரபிக் கடலில் உருவாக உள்ள புதிய புயலால் இந்த வெக்கை போகாதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அரபிக் கடலில் மே 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பின்னர் மே 16ஆம் தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புயல் உருவானால் அதற்கு தக்டே என பெயரிடப்படும். தக்டே என்பது மியான்மரில் ஒரு வகை பல்லி இனம் என்கிறார்கள். இந்த புயல் மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும் என்று கணிக்கப்படுகிறது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR