கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்- தனபால் பரபரப்பு பேட்டி

கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ்ஜின் அண்ணன் தனபால் சில தினங்களுக்கு முன்னர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 24, 2023, 03:03 PM IST
  • தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது கோடநாடு கொலை வழக்கு.
  • இதில் முக்கிய நபராக கருதப்படும் கனகராஜ்ஜின் அண்ணன் தனபால் பரபரப்பு பேட்டி.
  • எடப்பாடி பழனிசாமியை பிடித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை.
கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்- தனபால் பரபரப்பு பேட்டி title=

கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் அவரது அண்ணன் தனபால் கடந்த சில வாரத்துக்கு முன்பு நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தனபால் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

பரபரப்பு பேட்டி:

ஜாமினில் இருந்து வெளியில் வந்தவுடன் இன்று பேட்டியளித்த தனபால், நில மோசடி வழக்கில் தவறாக தனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மேலும், இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் காவல்துறையினர் வேண்டுமென்றே தன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து தன்னை அழைத்துச் சென்று காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்து கண் மற்றும் கைகளை கட்டி கீழே தள்ளிவிட்டு கடுமையாக இரும்பு கம்பியால் தாக்கியதாகவும் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக மேச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகம் தன்னை மிரட்டி கேட்டார் என்றும் கூறினார். ஆனால் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் தன்னை கடுமையாக தாக்கியதாகவும் பிறகு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

 சிறையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு கோவை உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆஞ்சியோ செய்ததாக கூறிய அவர் அப்போது தன்னுடைய இருதயம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் காவல்துறையின் தாக்கியதால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 

தன்னை வழக்கில் இருந்து  விடுவிக்க பத்து லட்ச ரூபாய் கேட்ட ஆய்வாளர் தனக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் தன்னுடைய தம்பி பழனிவேல் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகு ஜாமீன் வழங்க ஒப்புதல் வழங்கியதாகவும் பரபரப்பாக குற்றம் சாட்டினார். 

மேலும் படிக்க | குடும்பத்தையே விஷம் வைத்து கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்..! என்ன காரணம்..?

“உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்..”

கொடநாடு கொலை வழக்கு குறித்து முக்கிய விஷயங்களை தன்னுடைய தம்பி கனகராஜ்  தன்னிடம் பகிர்ந்து உள்ளார் உரிய நேரம் வரும்போது அதனை வெளியிடுவேன் என்றும் இதுவரை காவல் துறையினர் இது குறித்து தன்னை இடம் விசாரிக்கவில்லை என்றும் விசாரித்தால் அனைத்து உண்மைகளையும் வெளியில் கொண்டு வருவேன் என்றும் தெரிவித்தார். 

“எடப்பாடியை விசாரிக்க வேண்டும்..”

கொடநாடு கொலை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய குற்றவாளியாக உள்ளதாகவும் அவர்தான் தன்னுடைய தம்பியை பின்னால் இருந்து இயக்கிதாகவும் கூறினார். ஆனால் வழக்கில் ஏதும் சம்பந்தம் இல்லாதது போது எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும் முதலில் அவரை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த வழக்கில் அவர் தொடர்புடையவராக உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளது என்றும் தெரிவித்தார். 

எடப்பாடி பழனிச்சாமி சொல்லியதாக தான் கொடநாட்டிலிருந்து ஐந்து பெரிய பெரிய பேக்குகளில் ஆவணங்களை தன்னுடைய தம்பி கனகராஜ் கொடநாடு கொலை குற்றவாளி சயன் உதவியுடன் காரில் எடுத்து வந்ததாகவும் அதில் சங்ககரியில் மூன்று பைகளும் சேலத்தில் இரண்டு பைகளும் கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் கனகராஜ் செல்போன் தன்னிடம் இருந்தது என்றும் அதனை அப்போதைய எடப்பாடி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் பெற்றுக் கொண்டு அதிலிருந்து ஆவணங்களை அளித்ததாகவும் குற்றம் சாட்டினார். கொடநாடு கொலை வழக்கு குறித்து கனகராஜன் அண்ணன் தனபால் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிக்க | கிருஷ்ணகிரியில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம்! பறிபோன உயிர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News