மர்ம முடிச்சுகள் நிறைந்த கொடநாடு கொள்ளை வழக்கு திமுக அரசு பொறுப்பேற்றதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சசிகலாவிடமும் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளை வெளியிட்டது. இந்நிலையில், சசிகலாவும் கொடநாடு கொள்ளை வழக்கு விசாரணை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இரண்டு நாட்களாக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அமைச்சர் நேருவின் சகோதரர் கொலை வழக்கு - புதிய துப்பு கிடைத்திருப்பதாக தகவல்
காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார். "தன்னை பொறுத்த வரை எங்களது கொடநாடு எஸ்டேட் மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்த இடம். நாங்கள் அந்த இடத்தை கோயிலாக தான் பார்த்தோம். அந்த இடத்தில் நான் சிறையில் இருந்தபோது விரும்பத் தகாத செயல்கள் நடைபெற்றிருக்கின்றன.
எங்களிடம் நீண்ட நெடுங்காலமாக காவலாளியாக பணியாற்றிய ஓம்.பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளையும் நடந்துள்ளது. அதோடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக சந்தேகத்துக்குரிய வகையில் மரணம் அடைத்துள்ளனர். இதில் எந்த பாவமும் அறியாத தாயும், சின்னக் குழந்தையும் பலியாகியுள்ளனர். எனவே, காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். ஒன்றுமே அறியாத காவலாளி ஓம்.பகதூர், பிஞ்சுக் குழந்தை, அவரது தாயார் ஆகியோரின் மரணத்திற்கு நீதி கிடைத்திட வேண்டும்" என அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | தொடர் மின்வெட்டு - சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR