Lok Sabha Elections: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மதுரை மாவட்ட த்தில் அதிக அளவிற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணாக்கர்கள் விழிப்புணர்வு பேரணி, சைக்கிள் பேரணி, மனித சங்கிலி பேரணி, மாற்றுத்திறனாளிகள் பேரணி என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் ஒத்தக்கடை பகுதியில் உள்ள 400 மீட்டர் உயரமுள்ள யானைமலை மேல் மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதா மற்றும் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் ஏராளமான தேர்தல் அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள், காவல்துறையினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் மலையேற்றம் செய்து அங்கு 100 அடி நீளம் உள்ள 100 சதவித தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்திய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இதில் ‘வாக்கு விற்பனைக்கு அல்ல’, ‘வாக்களிப்பது நமது கடமை’, ‘100 சதவீத வாக்குப்பதிவு இலக்கு’ என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் படிக்க | தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா தொடக்கம்! தேரோட்டம் முழு விவரம் இங்கே
இதேபோன்று மதுரை சிவகங்கை சாலையில் அமைந்துள்ள பாத்திமா மைக்கேல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் 500க்கும் மேற்பட்டோர் உதவி தேர்தல் அலுவலர் வருவாய் கோட்டாச்சியருமான ஷாலினி தலைமையில் வாக்களிப்பதை உறுதிபடுத்தும் வகையில் I VOTE FOR SURE என்ற வாசக வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது வாக்களிப்பது எனது கடமை, வாக்களிப்பதை உறுதிபடுத்துவோம் என்ற விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோன்று மதுரை சோலைமலை கல்லூரியில் G-VIGIL மொபைல் செயலி குறித்து மாணவியர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியும் நடைபெற்றது.
இதுபோன்று வித்தியாசமான முறையில் மலையேற்றம் மற்றும் மனித சங்கிலி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க | காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல்: நடிகை குஷ்பூ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ