காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல்: நடிகை குஷ்பூ

காங்கிரசில் எந்த தலைவரும் இல்லை எந்தவிதமான நோக்கமும் இல்லை எல்லோரும் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள் என்றார் நடிகை குஷ்பூ.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 6, 2024, 12:06 PM IST
  • காங்கிரசில் எந்த தலைவரும் இல்லை எந்தவிதமான நோக்கமும் இல்லை.
  • தேர்தல் அறிக்கை வெளியிடுவதை விட கட்சியை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
  • மக்களை ஏமாற்றும் தேர்தல் அறிக்கை சாதியமற்றது குடியாத்தத்தில் நடிகை குஷ்பூ பேட்டி.
காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல்: நடிகை குஷ்பூ title=

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே வேலூர் பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகத்தை ஆதரித்து நடிகையும் பாஜாக மகளிர் ஆணைய செயற்குழு உறுப்பினருமான குஷ்பூ திறந்தவெளி கேராவேனில் நின்றபடி பிரச்சாரம் செய்தார்

பிரச்சாரத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு கூறுகையில், 55 ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை காங்கிரஸ் காப்பாற்றவில்லை இன்று புதிதாக வாக்குறுதி கொடுத்து என்ன செய்யப் போகிறார்கள். அவர்கள் இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார்கள் காங்கிரஸில் யாருமில்லை எந்த தலைவரும் இல்லை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கம் காங்கிரஸில் யாருக்கும் இல்லை.

மேலும் படிக்க | உதயநிதி ஸ்டைலில் கல்லை கையில் எடுத்த அதிமுக நிர்வாகி! பிரச்சாரத்தில் சரமாரி கேள்வி

தேர்தல் அறிக்கை வெளியிடுவதை விட கட்சியை காப்பாற்ற முயற்சி செய்யலாம் சாத்தியமில்லாத தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றுவதற்காக மக்களை சுலபமாக ஏமாற்றி விடலாம் மக்கள் என்ன சொன்னாலும் நம்பி விடுகிறார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

தற்போது டிஜிட்டல் காலத்தில் மக்கள் தெளிவாக உள்ளார்கள் மக்கள் ஏமாற மாட்டார்கள் பாஜகவுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்தியா முதல் ஐந்து இடத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது தற்போது இந்தியாவில் முன்னேற்றத்தை உலக நாடு பார்க்கிறது நிர்மலா சீதாராமனை கந்து வட்டிக்காரர் என்று முதல்வர் சொல்கிறார். கொடுத்த பணத்திற்கு கணக்கு கேட்பது தவறா மத்திய அரசிடம் நிதி வாங்கி இருக்கிறீர்கள் அது என்ன சேவை செய்துள்ளோம் என்பது சொல்லலாம்.

மும்முனை போட்டி என்பது கேட்பதற்கு சந்தோஷமாக உள்ளது பாஜக தமிழ்நாட்டில் இல்லை என்று சொன்னார்கள் தற்போது முக்கோணப்போட்டி வந்துள்ளது தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது. அதிமுக திமுக பாஜகவை எதிர்க்கட்சியாக பார்ப்பது சந்தோசமாக உள்ளது தமிழகத்தில் தற்போது பிள்ளையார் சுழி போட்டு உள்ளோம் என கூறினார்.

மேலும் படிக்க | தமிழிசை பற்றி கனிமொழியிடம் விசாரித்த தூத்துக்குடி மக்கள்! பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News