தஞ்சை பெரிய கோயில் திருவிழா
வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக் கோவில் சித்திரை பெருவிழா கோலாகலமாக துவங்கியது. கொடிமரம் முன்பு விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், அஸ்திர தேவர் தனி, தனியாக மலர்களால் அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட பிரம்மாண்ட கொடியை பக்தர்கள் கைகளில் ஏந்தி வரிசையாக நிற்க சிவாச்சாரியர்கள் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
தேரோட்டம், தீர்த்தவாரி எப்போது?
மங்கள வாத்யங்கள் முழங்க, சிவகனங்கள் இசைக்க சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களுடன், ஒதுவார்கள் திருமுறை ஒத நந்தி மண்டபம் முன்பு உள்ள பிரம்மாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு அலங்கார தீபம் காட்டப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு வழிப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் இந்த மாதம் 20ம் தேதி நடைபெறுகிறது. 22ம் தேதி தீர்த்தவாரி நடைப்பெறுகிறது. 23ம் தேதி சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.
மேலும் படிக்க | காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல்: நடிகை குஷ்பூ
தஞ்சை பெரிய கோயில் சிறப்பு
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. பாரம்பரிய பெருமை கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கோவில் விமானத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கல்லை எப்படி கோபுரத்தின் மேல் ஏற்றி இருப்பார்கள் என்பது போன்ற பல விஷயங்கள் இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
விழா ஏற்பாடுகள் தீவிரம்
தேரோட்டத்தின் போது முதலில் விநாயகர், பிறகு சுப்பிரமணியர், அம்மனுடன் தியாகராஜர் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியாக ராஜ வீதிகளில் வலம் வருவதைக் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | உதயநிதி ஸ்டைலில் கல்லை கையில் எடுத்த அதிமுக நிர்வாகி! பிரச்சாரத்தில் சரமாரி கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ