கோவிலில் அன்னதானம் பிரியாணி போட்டு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டிய இஸ்லாமியர்கள்!

Religious Harmony Annadanam: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தாருக்கு பாராட்டுகள் குவிகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2024, 05:56 PM IST
  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் வைகாசி பிரம்மோத்தவம்
  • திருத்தேர் உலா வந்த அத்தி வரத பெருமாள்
  • அன்னபிரசாதம் வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தார்
கோவிலில் அன்னதானம் பிரியாணி போட்டு மத நல்லிணக்கத்தை நிலைநாட்டிய இஸ்லாமியர்கள்!  title=

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவத்தில் பிரிஞ்சி சாதம் அன்னதானம் வழங்கிய இஸ்லாமிய குடும்பத்தினரின் செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று நடந்த திருத்தேர் உற்சவத்தில், இஸ்லாமிய குடும்பத்தினர், இந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி அனைவரையும்  மெய்சிலிர்க்க வைத்தனர்.

மத நல்லிணக்கத்தை நிலைநாட்டிய இஸ்லாமிய குடும்பத்தினர் என்று பலரின் பாராட்டுக்களும் இந்த அன்னதான குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது

திருத்தேரில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்கள் ஏராளமானோர் அன்னபிரசாதம் பெற்றுக் கொண்டனர். அவர்கள் அனைவரும் இஸ்லாமிய குடும்பத்தார் அன்னதானம் வழங்கியதை பாராட்டி வரவேற்றுள்ளனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலகபுகழ் பெற்ற அத்திவரதர் கோவில் என்றழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவமானது நடைபெற்று வருகிறது. இந்தப் பிரமோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும் படிக்க | பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறது புதாதித்ய ராஜயோகம்! தானம் செய்ய தயாரா?

இந்த பிரம்மோற்சவத்தையொட்டி, வரதராஜ பெருமாள் காந்தி சாலை, மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை, பேருந்து நிலையம், இரட்டை மண்டபம் வழியாக நான்கு ராஜ வீதிகளில் திருத்தேரில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். ஊர்வலம் வந்த திருத்தேர் மீண்டும் தனது நிலையை வந்தடைந்தது.  

வரதராஜ பெருமாள் வீதி உலா வரக்கூடிய வழிநெடுகிலும் குழுமியிருந்த ஏராளமானோர் அன்னதானங்கள் மற்றும் பிரசாதங்களை வழங்கி, தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி வந்தனர்.

காஞ்சிபுரம் செங்கழுநீரோடை வீதி பகுதி வழியாக திருத்தேர் வீதியுலா வந்தபோது, "ரகீம் என்கிற பிரியாணி கடையிலே" என்ற உணவுக் கடையின் உரிமையாளர் சையது ரகீம், தனது குடும்பதாருடன் அன்னதானம் செய்தார். உற்சவத்தையொட்டி வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு, பிரியாணி கடையிலே பிரிஞ்சி சாதம் அன்னதானமாக வழங்கினார். பக்தர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு சென்று அன்ன பிரசாதத்தினை பெற்று சென்று உண்டு மகிழ்ந்தனர்.

சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பல இடங்களில் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் மத நல்லிணக்கத்தை நிலைநாட்டக் கூடிய வகையில் இஸ்லாமிய குடும்பத்தார், வரதராஜப்பெருமாள் திருத்தேர் உற்சவத்தை ஒட்டி பிரியாணி கடையிலே பக்தர்களுக்கு சைவ உணவினை அன்னதானமாக வழங்கியது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி நல்வரவேற்பையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு... கோவையில் NIA போஸ்டர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News