பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறது புதாதித்ய ராஜயோகம்! தானம் செய்ய தயாரா?

Budhaditya Rajyog:  புதன், சூரியனுடன் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் ஏற்படும். எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சியாய இருப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2024, 01:53 PM IST
  • புதாதித்ய ராஜயோகம் நற்பலன்கள்
  • 4 ராசிகளுக்கு நல்லதை செய்யும் புதன் சூரியன் இணைவு
  • சூரியனின் ஆசீர்வாதம் பெறும் ராசிகள்
பணத்தை அள்ளிக் கொடுக்க வருகிறது புதாதித்ய ராஜயோகம்! தானம் செய்ய தயாரா?  title=

ஜோதிட சாஸ்திரங்களின்படி, கிரகங்களின் சேர்க்கையும் அவை இருக்கும் இடமும்  மிகவும் முக்கியமானதாகும். தற்போது சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் நிலையில், மே 31ம் நாளன்று சூரியன் இருக்கும் அதே ராசிக்கு புதன் செல்கிறார். ரிஷபத்தில் ஏற்படும் சூரியன் புதன் இணைப்பு 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இயங்கிக் கொண்டே இருக்கும் நவகிரகங்களும் தொடர்ந்து தங்கள் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன, அதனால் உருவாகும் கிரக சேர்க்கை ஒவ்வொரு ராசிக்கும் மாறுபட்ட பலன்களைக் கொடுக்கின்றன.

அதிலும் சூரியன், புதன் போன்ற சுப கிரகங்களின் சேர்க்கையால் யோகம் ஏற்படுகிறது. தற்போது மே 31ம் நாளன்று ஆதித்யன் எனப்படும் சூரியனுடன் புதன் இணைவதால் புதாதித்ய யோகம் உருவாகிறது. இந்த யோகம் அனைவருக்கும் சாதகமானதாக இருக்குமா என்றால், இருக்காது என்றே சொல்லலாம். ஆனால், சில ராசிக்காரர்களுக்கு அமோகமான லாபத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் கிரக சேர்க்கை இது.

புதாதித்ய யோகத்தினால், எந்த ராசிக்காரர்களின் நிதி நிலை மேம்படும், யாருக்கு புத்திசாலித்தனமாக செயல்படும் யோகம் உருவாகும் என்பதைத் தெரிந்து கொள்வோம். அதிலும், இந்த 4 ராசிக்கார்களும் தேவையானவர்களுக்கு தானங்களைக் கொடுத்தால், புதாதித்ய யோகம் மேலும் வலுவாக வேலை செய்யும்.

மேலும் படிக்க | ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் கிடைக்கும் அபூர்வ யோகங்கள்!

புதாதித்ய யோகத்தால் பலனடையும் ராசிகள்

சிம்மம்

ரிஷப ராசியில் புதன் மற்றும் சூரியனின் இணைவினால் சிம்ம ராசியினருக்கு அற்புதமான அதிர்ஷ்டம் ஏற்படும். வேலை செய்பவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் என பண வரத்து அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்குத் தான்... நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் சுமூகமாக முடிவடைய அன்னதானம் செய்யுங்கள்

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ரிஷப ராசியில் உருவாகும் புத்தாதித்ய ராஜயோகம் அதிர்ஷ்ட்டத்தைத் தரப் போகிறது. தொழிலில் புதிய உச்சங்களை அடையும் கன்னி ராசிக்காரர்களுக்கு மனதிற்கு நெருக்கமானவர்களுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானத்திற்கான புதிய வழிகளை தெரிந்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்க சர்க்கரை பொங்கலை வெள்ளிக்கிழமையன்று படைத்து அனைவருக்கும் அளிக்கவும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியனுடன் புதன் ஒரு வீட்டில் வசிக்க இருக்கும் காலத்தில் பல நன்மைகள் ஏற்படும். நிதி நிலைமை மேம்படும், வருமானம் மற்றும் சேமிப்பு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தை தரும். மனதில் இருந்த கவலைகளை புதாதித்ய யோகம் போக்கி, உற்சாகத்தைக் கொடுக்கும். கோடைக்காலமான தற்போது, நீர்மோர் தானம் செய்யுங்கள்

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாதித்ய ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல காலம் இது, புதிய ஒப்பந்தத்தைப் பெறலாம், வருமானத்திற்கு வழிவகுக்கும் பல வாய்ப்புகள் வீடு தேடி வரும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் வந்து சேர்வதற்கான காலம் இது. பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் சம்பளம் உயர அன்னதானம் செய்வது பலன் அளிக்கும்.

மேலும் படிக்க | திருமணத்திற்கு ரெடியா? ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டிய 10 ஜாதகப் பொருத்தங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News