சிக்கலில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி: அங்கீகாரம் ரத்தாகுமா?

பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 16, 2021, 03:16 PM IST
  • சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரை.
  • பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • சிவ சங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
சிக்கலில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி: அங்கீகாரம் ரத்தாகுமா?  title=

சென்னை: பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவின் (Siva Shankar Baba) சுஷில் ஹரி பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடிபட்டதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அவரைத் தேடி அவரது இருப்பிடம் சென்ற காவல்துறையினருக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவர் உத்தராகாண்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அவருக்கு எதிரான புகார்கள் அதிகரிக்கவே, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணையைத் தொடங்கியது. அவரை கைது செய்ய தமிழக காவல்துறை உத்தராகாண்டிற்கு விரைந்தது.

எனினும், காவல்துறையினர் (TN Police) அவர் இருப்பதாக கூறப்பட்ட மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே அவர் அங்கிருந்து தப்பி விட்டது தெரிய வந்தது. அவர் வெளி நாடு தப்பிச்சென்று விடாமல் இருக்க அவருக்கான லுக் அவுட் நோடீசை ஏற்கனவே அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் அளித்திருந்தனர். 

ALSO READ: Breaking News! CBCID Arrest: டெல்லியில் சிவசங்கர் பாபா கைது

இந்த நிலையில், சிவசங்கர் பாபா டெல்லியில் இருப்பதாக துப்பு கிடைக்கவே, அங்கு அவரை காவல்துறை சுற்றி வளைத்தது. டெல்லியின் காசியாபாதில் அவருக்கு ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அங்கு அவர் அடிக்கடி தங்க வருவதாகவும் காவல் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதனை அடுத்து, அந்த பகுதிகளில் விசாரணையை முடுக்கிவிட்ட போலீசாருக்கு இறுதியாக வெற்றி கிடைத்தது.

சிவசங்கர் பாபா விரைவில் சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்றும், அவரிடம் தீவிர விசாரணை நடத்த தமிழக போலீஸ் தயாராக உள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையில், இந்த தகவல்கள் வெளிவந்தவுடன், நேற்று முதல், சுஷில் ஹரி பள்ளியில் படிக்கும் பல மாணவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அப்பள்ளியிலிருந்து மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பலர் பள்ளிக்கு வந்து டி.சி-க்கான விண்ணப்பங்கள அளிப்பதையும் காண முடிந்தது. 

தற்போது, சுஷில் ஹரி பள்ளியை மூட செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது தவிர பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர ஏற்பாடு செய்யுமாறும் அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுஷில் ஹரி பள்ளியை அரசே (TN Government) ஏற்று நடத்தலாம் என்ற பரிந்துரையையும்  குழந்தைகள் நலக் குழுமம் முன்வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: ADMK EX Minister மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News