மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்த தமிழக கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Jun 30, 2022, 08:19 PM IST
  • தமிழகத்தில் 2 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
  • கடந்த 24 மணி நேரத்தில் 2,069 பேருக்கு பாதிப்பு
  • தமிழகம் முழுவதும் 11,094 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை
மீண்டும் 2 ஆயிரத்தைக் கடந்த தமிழக கொரோனா  title=

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும்  மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 23-ம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்த நிலையில் தற்போது ஒரே வாரத்தில் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த 24 மணி நேரத்தில்  2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 909 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 352 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

Tamilnadu daily corona cases

மேலும் படிக்க | மாட்டுத்தாவணி குடியிருப்பு பகுதியில் மின்மயான சர்ச்சை - நீதிபதிகள் சொன்னது என்ன ?

தமிழகம் முழுவதும் 11,094 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என உலக சுகாதார அமைப்பும் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 55 ஆண்டு காலம் அரசியலில் உள்ள எனக்கு எதற்கு விளம்பரம் - ஸ்டாலினின் அசத்தல் பேச்சு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News