மாட்டுத்தாவணி குடியிருப்பு பகுதியில் மின்மயான சர்ச்சை - நீதிபதிகள் சொன்னது என்ன ?

Matthuthavani Electric Crematorium : மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி அருகே மாநகராட்சி சார்பில் அதி நவீன மின் மயானம் அமைக்க தடை கோரிய வழக்கு. நீதிபதிகள் சொன்னது என்ன ?  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 30, 2022, 07:44 PM IST
  • மாட்டுத்தாவணியில் தொடரும் மின்மயான சர்ச்சை
  • நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த கற்பகநகர் குடியிருப்போர் சங்கம்
  • மதுரைக்கிளை நீதிபதிகள் சொன்னது என்ன ?
மாட்டுத்தாவணி குடியிருப்பு பகுதியில் மின்மயான சர்ச்சை - நீதிபதிகள் சொன்னது என்ன ? title=

மதுரையை சேர்ந்த கற்பகநகர் பகுதி குடியிருப்போர் சங்கம் சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  அதில், "மதுரை கற்பகநகர் சங்கர் நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உயர் நீதிமன்ற ஊழியர்கள் குடியிருப்பு, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள மயானங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாநகராட்சியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மதுரை மாநகராட்சி தனியார் நிதி உதவியுடன் மின் மயானம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | திருவண்ணாமலையில் கருணாநிதியின் சிலை வைக்க தடை இல்லை - உயர் நீதிமன்றம்

இதனால் இப்பகுதியில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் மயானம் அமைக்கும் பகுதியானது புதுக்குளம் கண்ணாய் நீர்நிலை புரம்போக்கு இதுபோன்று நீர்நிலைகளை ஆக்கிரமித்து மாநகராட்சி சார்பில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.  புதுக்குளம் கண்மாய்க்கு உட்பட்ட பகுதியில் புதிய கட்டுமானங்கள் கட்டக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு உள்ளது. எனவே புதுக்குளம் கண்மாயில் அமைய உள்ள மின்சார மயானம் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனு மதுரைக்கிளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஸ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 
‘இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதற்கு முன்பும், பின்பும் சில சம்பிரதாயங்கள் செய்யப்படும். இதனாலேயே இறந்தவர்களின் உடல்கள் ஆற்றங்கரையோரம் புதைக்கப்பட்டோ அல்லது எரிக்கப்பட்டோ வந்தது. ஆனால் கால மாற்றங்களுக்கு பின்பு நீர்நிலைகள் வறண்டு விட்டன.

அங்கு காளான்கள் போல் கட்டிடங்களும் எழுப்பப்பட்டு விட்டன. இதனால், உடல்களை எரிக்கப்படுவதற்கு அதிக தூரம் செல்ல மக்கள் விரும்பவில்லை. எனவே குடியிருப்பு பகுதியில் நவீன எரியூட்டு மையம் அமைவதை தடை செய்ய முடியாது’
எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

மேலும் படிக்க | 100 நாள் வேலைத் திட்டம் - எந்த மரங்களை நடவேண்டும் ; நடக்கூடாது - உயர் நீதிமன்றம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News