Tasmac Shops: விலை உயர்வுடன் திறக்கப்படுகின்றதா டாஸ்மாக்? இன்று முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறைகள் மெல்ல திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளையும் விரைவில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 11, 2021, 01:10 PM IST
  • டாஸ்மாக் கடைகளை விரைவில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
  • இது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரக்கூடும்.
  • குடிமகன்கள் டாஸ்மாக் கடை திறப்பு என்ற நல்ல செய்திக்காக காத்திருக்கிறார்கள்.
Tasmac Shops: விலை உயர்வுடன் திறக்கப்படுகின்றதா டாஸ்மாக்? இன்று முக்கிய அறிவிப்பு title=

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறைகள் மெல்ல திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளையும் விரைவில் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு (Tamil Nadu) முழுவதும் உள்ள டாஸ்மக் கடைகளை வரும் பதிநான்காம் தேதி திறக்கலாமா என்பது பற்றி தீவிர பரிசீலனை நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குடிமகன்களுக்கு ஒரு நல்ல செய்தியாக வந்துள்ளது. எனினும், கடைகள் திறக்கப்பட்டால், மதுபானத்தின் விலையை உயர்த்தவும் திட்டம் உள்ளது. இது பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இன்னும் வெளிவரவில்லை. 

தமிழகத்தில் கொரோனா பரவல் (Coronavirus) தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. தமிழ்கத்தில் மொத்தமாக சுமார் 432 டாஸ்மாக் கடைகள் உள்ளன. சில மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட போது மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. அதேபோல் தமிழகத்திலும் விரைவில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என கூறப்படுகின்றது. 

ALSO READ: தமிழகத்தில் டாஸ்மாக்கில் நேற்று ரூ. 426.24 கோடிக்கு மது விற்பனை!

இதற்கிடையில், மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் பணிகளும் அரங்கேறி வருகின்றன. சட்டவிரோதமாக இப்படி காய்ச்சப்படும் சாராயத்தால் பலரது உயிருக்கும் ஆபத்து வருகிறது. கள்ளச்சாராயத்தை காய்ச்சுபவர்களை பிடிப்பதில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால், தமிழ்நாட்டிலிருந்து  பலர் அங்கிருந்து மதுபான பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து அதை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இப்படி பதுக்கி வைக்கப்படும் மதுபான பாட்டில்களை போலீசார் கைப்பற்றி வருகின்றனர். இதில் ஈடுபடுள்ள பலர் கைதாகியும் உள்ளனர்.

இந்த அனைத்து பிரச்சனைகளையும் முடிவுக்கு கொண்டு வர, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 14 ஆம் தெதி திறக்க அரசு பரிசீலித்து வருகிறது. வரும் 14 ஆம் தேதியுடன் தமிழகத்தில் முழு ஊரடங்கு நிறைவடைகிறது. இதற்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது ஊரடங்கு தொடர்ந்து மேலும் சில தளர்வுகள் அளிக்கப்படுமா என இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மறுபுறம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பை இன்று அரசு வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில், மதுபானம் கிடைக்காமல் மதி கலங்கி இருக்கும் குடிமகன்கள், டாஸ்மாக் கடை (Tasmac Shops) திறப்பு என்ற நல்ல செய்திக்காக காத்திருக்கிறார்கள். 

ALSO READ:Tamil Nadu Lockdown: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இன்று முக்கிய அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News