12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: செக் செய்வது எப்படி

TN HSC Result 2023 Updates: தமிழகத்தில் 12 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் 2023 இன்று, மே 8, காலை 9:30 மணிக்கு வெளியானது. இந்த தேர்வு முடிவை எப்படி சரிப்பார்ப்பது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2023, 10:44 AM IST
  • தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
  • இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
  • 94.03% சதவீத மாணவர்கள் தேர்ச்சி.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: செக் செய்வது எப்படி title=

TN HSC Results 2023 declared: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி, ஏப். 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியிடப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், நீட் தேர்வு நாடு முழுவதும் மே 7ஆம் தேதி நடைபெறுவதால், மாணவர்களிடம் தேவையற்ற மன உளச்சலை தவிர்ப்பதற்காக பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிவைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி, நீட் தேர்வு நடைபெற்று முடிந்த அடுத்த நாளான மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் நடைபெறும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் மொத்தம் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அத்துடன் பிளஸ் 2 தேர்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 4.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. 

மேலும் படிக்க | இதுதான் திமுக அரசின் மாஸ்டர் பிளான் - விளக்கம் கொடுத்த மனுஷ்ய புத்திரன்!

தமிழ்நாட்டில் மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர். மறுபுறம் மாணவியர்கள் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்தாண்டு மார்ச்/ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 32,501 ஆகும். காஞ்சிபுரத்தில் தேர்வு எழுதிய மாணவ மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை 13141, இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 11935 ஆகும். பிளஸ் 2 தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை

 

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிப்பார்ப்பது

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை காண சில அதிகாரப்பூர்வ இணையதளங்கள் உள்ளன, அங்கு மாணவர்கள் தங்களின் 12 ஆம் வகுப்பு முடிவுகளை சரிப்பார்க்கலாம். இணையதளங்களை இங்கே பார்க்கவும்:
tnresults.nic.in
dge1.tn.nic.in
dge2.tn.nic.in
dge.tn.gov.in.

என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம்.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் இணையதளமான https://www.dge.tn.gov.in/ வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

அதுமட்டுமின்றி இந்த தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் வரும் ஜுன்/ஜுலை மாதத்தில் நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும். ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல்,  இதில் தேர்ச்சி பெற்று இந்த ஆண்டிலேலே உயர்கல்வியைத் தொடர முடியும்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

படி 1: அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://dge.tn.gov.in/result.html அல்லது https://tnresults.nic.in/

படி 2: முகப்புப் பக்கத்தில், HSC தேர்வு முடிவு 2023 முடிவு என்பதைக் கிளிக் செய்யவும்

படி 3: உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்

படி 4: பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்

படி 5: முடிவு திரையில் தோன்றும்.

படி 6: பிரிண்ட் அவுட் எடுத்து எதிர்கால குறிப்புக்காக சேமிக்கவும்

மேலும் படிக்க | மீஞ்சூர் அருகே விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளிக்கு சீல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News