பொறியியல் கலந்தாய்வு: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

TNEA 2022 Registration : தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Jun 20, 2022, 12:42 PM IST
  • பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
  • வரும் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
  • வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்
பொறியியல் கலந்தாய்வு: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம் title=

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குமென உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி B.E., B.Tech மற்றும் B.Arch படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது  

மாணவர்கள் https://tneaonline.org/ இணையதளத்தில் வரும் ஜூலை 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 110  சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | TN 12th Result 2022: பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு; எத்தனை சதவிகிதம் பாஸ்

ஜூலை 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ரேண்டம் எண் ஜூலை 22-ம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் 8-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஒரு தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். மூன்று பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்கள்  200-ஆக குறைக்கப்படும். (கணிதம் - 100, இயற்பியல் - 50 மற்றும் வேதியியல் - 50).

இதில் ஏதும் குறைகள் இருப்பின் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை புகார் தெரிவிக்கலாம். தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை ஆன்லைனிலேயே 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஆகஸ்ட் 16-ம் தேதி தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News