தமிழகம் பாஜக பக்கம் திரும்புவதற்கான நல்ல சூழல் உருவாகி உள்ளது - வானதி சீனிவாசன்

தமிழகம் பாஜக பக்கம் திரும்புவதற்கான நல்ல சூழல் உருவாகி உள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.   

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Mar 9, 2024, 07:16 PM IST
  • தமிழகம் பாஜக பக்கம் திரும்புவதற்கான நல்ல சூழல் உருவாகியிருக்கிறது
  • நம்பிக்கையுடன் பேசிய வானதி சீனிவாசன்
  • வெகு நிச்சயமாக இந்த முறை தமிழகத்திலே வெற்றி பெறும் என கூறியிருக்கிறார்

Trending Photos

தமிழகம் பாஜக பக்கம் திரும்புவதற்கான நல்ல சூழல் உருவாகி உள்ளது - வானதி சீனிவாசன்  title=

இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு விழா கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 83 வது வார்டு காட்டூர், 70 வார்டு தெப்பக்குளம் மைதானம் மற்றும் 68 வார்டு சிவானந்தா காலனி ஆகிய மூன்று பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்களுக்கு 24 மணி நேரம் விநியோகம் செய்யப்படும் ஏ.டி.எம் குடிநீர் இயந்திரத்தை பொதுமக்களுக்கு பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கக் கூடிய எந்திரங்களை நிறுவிக் கொண்டுள்ளதாகவும், ஒவ்வொரு வாட்டர் ஏ.டி.எம் இயந்திரத்தில் ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையிலும், தற்பொழுது வரை கோவை தெற்கு தொகுதியில் ஒன்பதாவது இயந்திரத்தை அமைத்து உள்ளதாகவும், இதன் வாயிலாக ஒவ்வொரு குடும்பமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீரை அவர்கள் எலக்ட்ரானிக் கார்டு மூலம் எடுத்துக் கொள்ளலாம். இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இந்தக் கார்டுகள் வழங்கி வருகிறோம் என்ற அவர், இந்த எந்திரத்தில் கூடுதல் வசதியாக கார்டு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒரு பட்டனை அழுத்தினால் உடனடி தேவைக்காக ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கும் வசதி ஏற்படுத்தி உள்ளதாகவும், கார்டு இல்லாமல் சாதாரண மக்கள் பயன் பெறும் வகையில் தாகத்தை தணிக்க இந்த வசதியை முதல் முறையாக இந்த எந்திரத்தில் ஏற்பாடு செய்து உள்ளதாகவும், அதனால் இந்த பகுதி மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எங்களது விருப்பம் என்றும் கூறினார். 

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணியில் தீவிரமாக இயங்கிக் கொண்டு உள்ளதாகவும், இந்தியா முழுவதும் மற்ற அரசியல் கட்சிகள் களத்திற்கு வரும் முன்பாக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை 195 இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே துவக்கி விட்டதாகவும், தமிழகத்தில் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும், தேர்தல் பணிகள் வேகம் எடுத்துக் கொண்டு உள்ளதாகவும், ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணி குழுக்கள் நியமிக்கப்பட்டு, முழு வீச்சில் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி தயாராகிக் கொண்டு உள்ளது என்றார். 

வெகு நிச்சயமாக இந்த முறை தமிழகத்திலே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி கனிகளை குவிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்றும், இப்பொழுது இருக்கின்ற தேர்தலில் முக்கியமான கேள்வி என்பது யார் இந்த நாட்டினுடைய அடுத்த பிரதமர் என்பது தான் அடுத்த பிரதமராக பத்தாண்டுகளாக நாட்டை உயர்த்தி கொண்டு, முன்னேற்றிக் கொண்டு உள்ள பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறை பிரதமர் ஆக வேண்டும் என்பது தான் இந்த தேர்தல்.

அதனால் தமிழகத்தின் உடைய தேர்தல் களத்திலே நாங்கள் வைப்பது ஒரே ஒரு கேள்வி தான் இந்த நாட்டினுடைய பிரதமராக யார் வர வேண்டும் அதற்கு வாக்களியுங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கின்ற பிரதமருக்கு சரி சமமாக ஒரு வேட்பாளர் கூட இந்த நாட்டிலே கிடையாது, அப்படி இருக்கின்ற சூழலில் தமிழகம் தேசியத்தின் பக்கம் திரும்புவதற்கான ஒரு நல்ல சூழல் உருவாகி கொண்டு உள்ளதாகவும், இந்தத் தேர்தலில் எங்களுடைய பணிகளும் பல மடங்கு அதிகரிக்கும் என்றவர், ஏனென்றால் கட்சியினுடைய உறுப்பினர்களும் செயல்பாடுகளும் அதிகரித்து உள்ளதாகவும், வெகு நிச்சயமாக பிரதமருடைய வெற்றியை அவரிடம் கொடுக்க வேண்டும்  என்பதில் ஆவலாக காத்துக் கொண்டு உள்ளதாகவும் கூறினார். 

மேலும் படிக்க | பிரதமரின் 'நமோ ட்ரோன் திதி யோஜனா' திட்டத்தில் 1000 மகளிருக்கு இலவச ட்ரோன் பயிற்சி!

கூட்டணி பேச்சுவார்த்தை என்பதை பொறுத்த வரைக்கும் அகில இந்திய அளவிலே இருக்கின்ற சூழல் தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கின்ற வரையிலும் கூட கூட்டணிகள் வருவார்கள், இதற்கு முன்பும் அதனை பார்த்து உள்ளதாகவும், இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு கட்சிகள் வந்து கொண்டு உள்ளதாகவும், டெல்லியில் ஒவ்வொரு நாளும் புதுக் கட்சிகள் வந்து கொண்டு உள்ளதாகவும், தேர்தல் நெருங்குகின்ற போது ஒரு பிரம்மாண்டமான சேனையுடன் இருப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார். 

மேலும் படிக்க | தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம்: திருச்சியில ஐஜேகே மாநாடு... திரளாக கூடிய மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News