கோவை ஷாக்: குடும்பமே தற்கொலை! காரணம் என்ன?

கோவை, கவுண்டம்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 24, 2024, 04:54 PM IST
  • கோவையில் குடும்பமே தற்கொலை
  • கேக்கில் விஷம் தடவி சாப்பிட்டுள்ளனர்
  • மகளின் திருமண உறவு முறிவால் விபரீத முடிவு
கோவை ஷாக்: குடும்பமே தற்கொலை! காரணம் என்ன? title=

கோவை கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் ரோடு ஜவஹர் நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 65). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி விமலா (55). இவர்களுக்கு தியா காயத்ரி (25) என்ற மகள் இருந்தார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களின் சொந்த ஊர் கேரளா ஆகும். காயத்ரிக்கும், கோவை வடவள்ளியை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் தீட்சித் என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணமானதும் இருவரும் பெங்களூருவில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். 

மேலும் படிக்க | விஜயதரணி விலகல்: காங்கிரஸ் ரியாக்ஷன் - பறிபோகும் எம்எல்ஏ பதவி..!

இந்தநிலையில் திருமணமான ஒரு மாதத்திலேயே கடந்த டிசம்பர் மாதம் காயத்ரிக்கும், அவருடைய கணவர் தீட்சித்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கோபித்துக்கொண்டு காயத்ரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. திருமணமான ஒரு மாதத்திலேயே தனது மகள் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக வீட்டிற்கு வந்தது பெற்றோருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

இதனால் மனமுடைந்த தந்தை கணேசன், தாய் விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் 3 பேரும் கடந்த 21-ந் தேதி கேக்கில் விஷத்தை தடவி அதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்யும் முன்பு கணேசன் கோவையில் உள்ள தம்பியை தொடர்புகொண்டு மகளின் நிலை குறித்து மிகுந்த வேதனையுடன் தெரிவித்து உள்ளார். அதன்பிறகு அவர் தொடர்புகொள்ளவில்லை.

இதையடுத்து கணேசனின் தம்பி அண்ணனின் செல்போனுக்கு பல முறை அழைப்பு கொடுத்தும் அவர் எடுக்காததால் சந்தேகத்தில் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் கணேசன், விமலா, காயத்ரி ஆகியோர் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உடனே கவுண்டம்பாளையம் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார், இன்ஸ்பெக்டர் ராஜேஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு பிணமாக கிடந்த கணேசன், விமலா, காயத்ரி ஆகியோரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், அவர்களின் தற்கொலைக்கு காரணம் மகள் தியா காயத்ரி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வந்ததாலும், பெற்றோருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு காரணமாகவும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | திண்ணை பிரச்சாரம்: திமுக மகளிரணிக்கு கனிமொழி புதிய டாஸ்க்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News