பஸ் கட்டணம் குறைத்தது போல் நாடகம்: விஜயகாந்த் கண்டனம்!

அரசு பேருந்து கட்டணத்தை குறைத்தது போல் நாடகம் ஆடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயாகந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Last Updated : Jan 28, 2018, 04:58 PM IST
பஸ் கட்டணம் குறைத்தது போல் நாடகம்: விஜயகாந்த் கண்டனம்! title=

அரசு பேருந்து கட்டணத்தை குறைத்தது போல் நாடகம் ஆடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயாகந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக கடந்த 6 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி 20 முதல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இன்று குறைக்கப்பட்ட பஸ் கட்டணத்தின்படி, > சாதாரண பேருந்துகளில் கட்டணம் 60 பைசாவில் இருந்து 58 பைசாவாகவும், விரைவு பேருந்துகளில் 80 பைசாவில் இருந்து 75 பைசாவாகவும், சொகுசு பஸ்களில் 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதிநவீன பஸ்களில் 110 பைசாவிலிருந்து 100 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பஸ்களில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5 லிருந்து ரூ. 4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிவிட்டரில் விஜயகாந்த் வெளியிட்ட பதிவி:-

5% முதல் 10% வரை குறைத்து, தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்து விட்டதுபோல் நாடகம் ஆடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். உயர்த்தப்பட்ட கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

Trending News