Weekend curfew: தமிழகத்தில் இன்று வார இறுதி முழு ஊரடங்கு! அனுமதியும் தடையும்...

பொங்கல் பண்டிகை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. இன்றைய ஊரடங்கின்போது எவை செயல்படும்? எவை இயங்காது?

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 16, 2022, 06:51 AM IST
  • தமிழகத்தில் இன்று வார இறுதி முழு ஊரடங்கு
  • புறநகர் ரயில் சேவை செயல்படும்
  • மதுபானக் கடைகளுக்கு தடை
Weekend curfew: தமிழகத்தில் இன்று வார இறுதி முழு ஊரடங்கு! அனுமதியும் தடையும்...  title=

உலக மக்கள் அனைவரையும் நடுநடுங்க செய்த கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல், புதிய அவதாரமாக ஒமிக்ரான் என்ற பெயரில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 உலக நாடுகள் பலவும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை (Corona Restrictions) கையாண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் என பல வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அரசு கொரோனாவுக்கு எதிரான போரை தீவிரமாக்கியுள்ளன.

கொரோனா கட்டுப்பாட்டிற்காக தமிழக அரசு வகுத்த கட்டுப்பாடுகளும் முக்கியமானது ஊரடங்கு. வார இறுதி நாட்களில் அமலில் இருக்கும் இந்த ஊரடங்கின்போது எவை செயல்படும்? எவை இயங்காது?

ALSO READ | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்த முப்படை விசாரணைக்குழு அறிக்கை வெளியானது

இன்று எவையெல்லாம் செயல்படும்?

மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும்

பெட்ரோல் பங்குகள் செயல்படும்

உணவகங்கள் செயல்படும். 

பார்சல் வாங்கிக்கொள்ள அனுமதி.

அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.

திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் பத்திரிக்கைகளுடன் செல்ல அனுமதி

காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் செயல்படும்

புறநகர் ரயில் சேவை செயல்படும்

ALSO READ | 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்

எவற்றுக்கெல்லாம் தடை?

பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது.

கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை

மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட  அத்தியாவசியமற்ற கடைகள் (Corona Restrictions) அனைத்துக்கும் தடை

வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதியில்லை

ALSO READ | தேர்தல் பேரணிகள், சாலை நிகழ்வுகளுக்கான தடை ஜனவரி 22 வரை நீட்டிக்கப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News