துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்

சமீப காலமாக அமெரிக்காவில் கைத்துப்பாக்கி கலாச்சாரத்தால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 7, 2022, 04:41 PM IST
  • நியூயார்க் சட்டமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மசோதா.
  • பாதுகாப்பு தொடர்பான 10 மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்து
  • நியூயார்க்கில் கைத்துப்பாக்கிக்கு புதிய சட்டம்
துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம் title=

அமெரிக்கா: சமீப காலமாக அமெரிக்காவில் கைத்துப்பாக்கி கலாச்சாரத்தால் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 15 நாட்களில் துப்பாக்கி சூடு தொடர்பான 3க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

இதனைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் இந்த திசையில் முதன் முதலாக முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.

நியூயார்க்கில் கைத்துப்பாக்கிக்கு புதிய சட்டம்

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, கடுமையான சட்டங்களைக் கொண்டு வர கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களைக் கருத்தில் கொண்டு நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ், 21 வயதுக்குட்பட்டவர்கள் இந்த மாகாணத்தில்,   துப்பாக்கிகளை வாங்க முடியாது. இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுத்த முதல் மாநிலமாக நியூயார்க் மாறியுள்ளது.

பாதுகாப்பு தொடர்பான 10 மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்து

பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான 10 மசோதாக்களில் ஆளுநர் ஹோச்சுல் கையெழுத்திட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவற்றில் ஒன்றின் கீழ், புதிய துப்பாக்கிகளில் 'மைக்ரோஸ்டாம்பிங்' கட்டாயமாக்கப்படும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் துப்பாக்கி குற்றங்கள் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க | அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்; அதிர வைக்கும் தகவல்கள்

மற்றொரு திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், தமக்கோ அல்லது பிறருக்கோ ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்களிடமிருந்து துப்பாக்கிகளை தற்காலிகமாக கைப்பற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிராங்க்ஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆளுநர் ஹோச்சுல், 'நியூயார்க்கில் நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆபத்தான நபர்களிடமிருந்து துப்பாக்கிகளை கையகப்படுத்தும்  வகையில் சட்டங்களை கடுமையாக்குகிறோம்.

நியூயார்க் சட்டமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மசோதா

மே 14 அன்று,  பல்பொருள் அங்காடியில் இனவெறி தாக்குதலில் 10 கறுப்பின மக்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, மே 24 அன்று, டெக்சாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடந்தது, அதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சம்பவங்களுக்குப் பிறகு, அமெரிக்கா முழுவதும் துபாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் இந்த விவகாரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். இந்நிலையில், நியூயார்க் முதலில் அப்படியொரு சட்டத்தை உருவாக்கத் தொடங்கியது. இது தொடர்பான மசோதாவை நியூயார்க் சட்டமன்றம் கடந்த வாரம் நிறைவேற்றியது. தற்போது கவர்னர் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும் படிக்க | அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை; காரணம் என்ன

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News