Afghanistan: பரிதாப நிலையில் பெண்கள், போராளிகளுக்கு அடிமைகளாகும் பரிதாபம்

தாலிபான் கலாச்சார ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில், அனைத்து இமாம்களும் மதகுருக்களும் தாலிபான் வசமுள்ள பகுதிகளில் தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்ட விதவை பெண்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2021, 06:29 PM IST
Afghanistan: பரிதாப நிலையில் பெண்கள், போராளிகளுக்கு அடிமைகளாகும் பரிதாபம் title=

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் தொடர்ந்து ஆப்கானிய பாதுகாப்புப் படைகளைத் தாக்கி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தாலிபான் (Taliban)ஒரு புதிய ஆணையை வெளியிட்டுள்ளது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சிறுமிகள் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட அனைத்து விதவை பெண்களின் பட்டியலும் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெண்கள் மீது தலிபானின் தவறான பார்வை 

த சன் பத்திரிகையில் வெளியான ஒரு அறிக்கையின்படி, தாலிபான்கள் இந்த பெண்களை தங்கள் போராளிகளுக்கு திருமணம் செய்துவைத்து பின்னர் பாகிஸ்தானின் (Pakistan)வஜீரிஸ்தானுக்கு இவர்களை அனுப்பப்போவதாக உறுதியளித்துள்ளனர். முஸ்லீம் அல்லாத பெண்கள் மதம் மாற்றப்படுவார்கள்.

தாலிபான்கள் இந்த பெண்களை தங்கள் போராளிகளின் அடிமைகளாக்க விரும்புகிறார்கள். போராளிகள் இந்த பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

ALSO READ: தலிபான்கள் வசமாகும் ஆப்கானிஸ்தான்; இந்திய தூதரகம் மூடப்பட்டதா..!! 

பட்டியலைக் கேட்டு தலிபான் ஒரு கடிதத்தை வெளியிட்டது

தாலிபான் கலாச்சார ஆணையம் வெளியிட்டுள்ள கடிதத்தில், அனைத்து இமாம்களும் மதகுருக்களும் தாலிபான் வசமுள்ள பகுதிகளில் தற்போது 15 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்ட விதவை பெண்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பெண்கள் தாலிபான் போராளிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்துகின்றனர்

அமெரிக்கா (America) , பிரிட்டன் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி, தாலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. ஒரு அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானின் 85 சதவீத நிலப்பகுதியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியேற தடை 

தாலிபான்கள் தங்களது ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இப்பகுதிகளில் இப்போது புகைபிடிப்பதற்கும், தாடியை வெட்டுவதற்கும் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மீண்டும் தலிபான்கள் வசமாகிறதா ஆப்கானிஸ்தான்; அரசு கூறுவது என்ன..!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News