ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெறப்படும் என கடந்த வாரம் அமெரிகக் அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் மிக வேகமாக வெளியேறி வருகின்றன
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகள் தங்கள் கட்டுபாட்டில் வந்து விட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட தாலிபானின் அறிவிப்பு உலக நாடுகளை பலவற்றிற்கு அதிர்ச்சி அளித்துள்ளன.
இந்தியாவும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் கவலை அளிப்பதாக கூறியுள்ளது. இந்தியா வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ரஷ்யா வெளியுறவு அமைச்சர் sஎர்ஜி லாவ்ரோவ் (Sergey Lavrov) மாஸ்கோவில் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த தாலிபானின் (Taliban) தூதுக்குழு, மொத்தமுள்ள 350 மாவட்டங்களில் 290 மாவட்டங்களை தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தது. மேலும் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய பிறகு அது திவீரவாதிகளின் மையமாக செயல்பட அனுமதிக்கப்பட மட்டாது எனவும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஆப்கானிஸ்தானி இருந்து செயல்பட விடமாட்டோம் என தாலிபான் தூதுக்குழு தெரிவித்துள்ளது.
ALSO READ | Pakistan: வரலாறு காணாத கடும் வறட்சியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்
ஆனால், இது குறித்து ஆப்கானிஸ்தான் அமைச்சரவை செய்தி தொடர்பாளர், தாரிக் ஏரியான் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேறு விதமாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாலிபான் பயங்கரவாத அமைப்பு கூறுவதில் உண்மை இல்லை என்றும், ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன எனவும் தெரிவித்தார். ஒரு சிலப் பகுதிகளில் மட்டுமே தாலிபானின் கட்டுபாட்டில் இருப்பதாக தெரிவித்த செய்தி ஆப்கான் அரசு தொடர்பாளர், அந்த பகுதிகளையும், தாலிபான்களிடம் இருந்து மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆப்கான் அரசு எடுத்து வருவதாக தெரிவித்தார்.
ALSO READ | Twitter-க்கு போட்டியாக GETTR; டொனால்ட் டிரம்ப் குழுவின் புது சமூக ஊடக தளம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR