வாஷிங்டன்: சீனாவைப் பற்றிய ஒரு அமெரிக்க அறிக்கை வெளிவந்துள்ளது. இது உலக நாடுகளின் பீதியை அதிகரித்துள்ளது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை சீனா வேகமாக உருவாக்கி வருவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சீனா வெற்றி பெற்றால், அந்நாட்டின் ஆதிக்கமும் அடாவடித்தனமும் இன்னும் அதிகரிக்கும். அதே நேரத்தில், அமெரிக்க உளவுத்துறை, சீனா (China) தனக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான விண்வெளி தொழில்நுட்பத்தில் உள்ள ஏற்றத்தாழ்வைக் குறைக்கக்கூடிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருவதாக கூறுகின்றது.
அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல்
ரஷ்ய வலைத்தளமான வெஸ்ட்னிக், ப்ளூம்பெர்க்கை மேற்கோள் காட்டி, செயற்கைக்கோள்களை ஜாம் செய்து அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்களில் சீனா அதிக முதலீடு செய்கிறது என்று கூறியுள்ளது. இத்தகைய ஆயுதங்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அதிபராக இருந்தபோது, அமெரிக்க விண்வெளிப் படை (US Space Force) அமைக்கப்பட்ட பின்னர், விண்வெளியில் பிற செயற்கைக்கோள்களை நாசப்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் தொழிநுட்பத்தை உருவாக்குவதை சீனா தீவிரப்படுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ALSO READ:South Africa: சிறையில் முன்னாள் அதிபர், தொடரும் வன்முறை, பீதியில் மக்கள்
இந்த ஆயுதங்களின் ஆற்றல் என்ன?
பென்டகனின் இந்தோ-பசிபிக் கட்டளையின் உயர்மட்ட உளவுத்துறை அதிகாரி ரியர் அட்மிரல் மைக்கேல் ஸ்டுட்மேன் ஒரு வெபினாரில், சீனா தீய நோக்குடன் செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை தயாரிக்கிறது என்று கூறினார். இவை செயற்கைக்கோள்களைத் தாக்கும் திறன் கொண்டவை என்றும் அவர் தெரிவித்தார். சீனா அமெரிக்காவின் விண்வெளி திறனைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அமெரிக்க நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
போர் வந்தால் சீனா பயனடையும்
சீனா அமெரிக்காவுடன் போரிட்டால், அதனால் தனது நோக்கங்களை எளிதாக பாதுகாக்க முடியும் என்று மைக்கேல் ஸ்டட்மேன் எச்சரித்தார். ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவின் (America) தேசிய புலனாய்வு இயக்குனர் சீனாவின் இராணுவ முன்னேற்றம் குறித்து எச்சரித்திருந்தார்.
சீன ராணுவம், ஒருங்கிணைந்த விண்வெளி சேவை செயற்கைக்கோள்களின் உளவு மற்றும் நிலைகளின் மதிப்பீடு, வழிசெலுத்தல் மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு பற்றிய தகவல்களை சேகரித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு நிபுணர்கள் சமீபத்தில் பலமுறை எச்சரித்துள்ளனர்.
ALSO READ: ஒண்ணா நின்னு கெத்தா சமாளிப்போம்: உறுதி பூண்டன சீனாவும் வட கொரியாவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR