வேலையே செய்யாம இருந்தாலும், எலோன் மஸ்க் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

Elon Musk Income Per Second: பல்வேறு புதிய முயற்சிகளில் எலோன் மஸ்கின் ஈடுபாடு அவரின் வெற்றிக்கும், வருமானத்திற்கும் அடிப்படையாக உள்ளது. அவரது ஒரு நொடியின் மதிப்பு என்ன தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2024, 08:55 PM IST
  • எலோன் மஸ்கின் ஒரு நொடியின் மதிப்பு என்ன தெரியுமா?
  • வெற்றிக்கும் வருமானத்திற்கும் அடிப்படை என்ன?
  • புதிய முயற்சிகளில் எலோன் மஸ்கின் ஈடுபாடு
வேலையே செய்யாம இருந்தாலும், எலோன் மஸ்க் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? title=

ஒரு விநாடியின் மதிப்பு என்ன? ஆளுக்கு ஆள் மாறுபட்டாலும், தொழில்நுட்ப ஜாம்பவான் எலோன் மஸ்கின் ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.  அதிலும் அவர் ஒரு நொடியில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த தகவலாக இருக்கிறது.

ஃபோர்ப்ஸ்  பில்லியனர்களின் குறியீட்டின்படி, எலோன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 198.9 பில்லியன் டாலர்கள் ஆகும். அவர் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் என்ற சுவராசியமான செய்தி ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.

கடந்த ஆண்டு, எலோன் மஸ்க், 'உலகின் மிகப் பெரிய பணக்காரர்' என்ற நிலையில் இருந்து கீழே இறங்கினார். ஆனாலும்கூட, எலோன் மஸ்கின் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய சொத்தின் மதிப்பில் $6,887 அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்!  

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் சர்வதேச அளவிலான நிகழ்நேர பில்லியனர்களின் குறியீட்டின்படி, எலோன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 198.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஒரு நொடி, ஒரு நிமிடம், ஒரு மணிநேரம் மற்றும் அதற்கும் மேலாக அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை கணக்கிட்டால், ஆச்சரியமாக இருக்கிறது. 

எலோன் மஸ்கின் சொத்துக்களின் நிகர மதிப்பு $229 பில்லியனில் இருந்து 198.9 பில்லியனாகக் குறைந்திருந்தாலும், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியின் கடந்த ஆண்டு (2023) மொத்த வருமானம் $3.6203 பில்லியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அவரது வருவாயைப் விலாவரியாக ஆராய்ந்து பார்த்தால், மலைக்க வைக்கிறது.

மேலும் படிக்க | காதலர் தினத்தில் காதலிக்கு திருமணத்தை பரிசாக அறிவித்த 60 வயது ஆஸ்திரேலிய பிரதமர்!

ஒரு ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற கணக்கின்படி ஒரு வருடத்தில், 31,536,000 வினாடிகள் உள்ளன. ஒரு வருடத்தில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கையால் $3.6203 என்ற அவரது வருமானத்தை வகுத்தால் கிடைக்கும் மிகப்பெரிய எண்: $114.80. 

இது நிமிடத்திற்கு $6,887, ஒரு மணி நேரத்திற்கு $413,220, ஒரு நாளைக்கு $9,917,280 மற்றும் வாரத்திற்கு $69,420,960 என்பது தான் எலோன் மஸ்கின் வருமான கணக்கு!

எலோன் மஸ்க்கின் வருமான ஆதாரங்கள்
X சமூக ஊடகம், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான SpaceX, ஆட்டோமொபைல் தயாரிக்கும் நிறுவனமான டெஸ்லா, Starlink, The Boring Company, xAI மற்றும் Neuralink என பல பிரபல மற்றும் வெற்றிகரமான பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் எலோன் மஸ்க் என்பது குறிப்பிடத்தக்கது.  

டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் தொடர்பான  கண்டுபிடிப்புகள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி முயற்சிகள் மற்றும் பல்வேறு புதிய முயற்சிகளில் எலோன் மஸ்கின் ஈடுபாடு அவரின் வெற்றிக்கும், வருமானத்திற்கும் அடிப்படையாக உள்ளது. ஒரு வினாடிக்கு ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை சாதாரண மனிதர்கள் பார்க்க வேண்டுமா என்ன?

மேலும் படிக்க | ஆத்தாடி இவ்ளோ பெருசா...? எப்புட்றா.. என்ன வேகம்.. - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News