பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க UAE தடை..!!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாகிஸ்தான் மற்றும் பிற 11 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு புதிதாக விசாக்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

Last Updated : Nov 19, 2020, 12:43 PM IST
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாகிஸ்தான் மற்றும் பிற 11 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு புதிதாக விசாக்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
  • பாகிஸ்தானில் இதுவரை மொத்தம் 3,63,380 பேருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன.
  • தற்போது நாட்டில் உள்ளஆக்டிவ் பாதிப்புகளின் எண்ணிக்கை 30,362 ஆகும்.
பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க UAE தடை..!!! title=

பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு விசா வழங்க ஐக்கிய அரபு அமீரகம் (UAE)  தடை விதித்துள்ளது. 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாகிஸ்தான் மற்றும் பிற 11 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு புதிதாக விசாக்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்த 12 நாடுகளில் இந்தியா இல்லை. பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் புதன்கிழமை செய்தியை உறுதிப்படுத்தியது என பாகிஸ்தான் செய்தித்தாள் எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கியுள்ளதால், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது என்று கூறினார்.

பாகிஸ்தான் (Pakistan) வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி, பாகிஸ்தான் உட்பட 12 நாடுகளுக்கு புதிய பயண விசாக்களை வழங்குவதை ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என கூறினார். ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானைத் தவிர, துருக்கி (Turkey), ஈரான், யேமன், சிரியா, ஈராக், சோமாலியா, லிபியா, கென்யா மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வருபவர்களுக்கான பயண விசா வழங்குவதை ஐக்கிய அரபு அமீரக அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு அமீரக அரசு இந்த  முடிவை  எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், நாட்டில் 2,000 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளை கருத்தில் கொண்டு பாகிஸ்தானில் பயணிகள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் ஜூன் மாதத்தில் அறிவித்தது. பாகிஸ்தானில் இதுவரை மொத்தம் 3,63,380 பேருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளன. தற்போது நாட்டில் உள்ளஆக்டிவ் பாதிப்புகளின் எண்ணிக்கை 30,362 ஆகும்.

ALSO READ | அடுத்து வருகிறது மனிதர்கள் மூலம் வரவும் Chapare Virus: விஞ்ஞானிகள் அளித்த பகீர் Report!!
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News