மத்திய ஊழியர்களுக்கு சம்பளத்தில் Double Bonanza!
7th Pay Commission: தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புது டெல்லி: 7th Pay Commission: தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளி பரிசாக அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இத்துடன் 3 மாத நிலுவைத் தொகையும் கொடுக்கயுள்ளது. அதாவது, இந்த மாதம் ஊழியர்களின் சம்பளம் அமோகமாக உயரப் போகிறது. இந்த அறிவிப்புக்கு பிறகு சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை இங்கே பார்போம்.
சம்பள தரத்திற்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கும்
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) மீண்டும் 3% உயர்த்தியுள்ளது, அதன்படி தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DA மற்றும் DR 31% வீதம் வழங்கப்படும். மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது அடிப்படை ஊதியம் மற்றும் தரத்திற்கு ஏற்ப சம்பள உயர்வு குறித்த ஆலோசனையை பெறலாம்.
ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி, இனி இந்த தொகையும் சம்பளத்தில் சேரும்
அரசு 31% DA அறிவித்தது
தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபாவளி பரிசாக அவர்களது அகவிலைப்படியை (Dearness Allowance) 3 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள்.
இந்த அறிவிப்பு ஜூலை 1ம் தேதி முதல் அமலானது
மத்திய அரசின் அறிவிப்பின்படி, அகவிலைப்படி உயர்வு இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. முன்னதாக ஜூலையில், அரசாங்கம் அகவிலைப்படியை (DA Hike) 11 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை உயர்த்தியது. அதன்பின், தற்போது 3 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும்.
சம்பளம் ரூ.6480 அதிகரிக்கும்
மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA Hike) ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18 ஆயிரம் என்றால், அவருக்கு தற்போது அகவிலைப்படியாக ரூ.5,040 கிடைக்கிறது. இந்த தொகை அடிப்படை சம்பளத்தில் 28 சதவீதமாகும். DA இல் 3% அதிகரிப்புக்குப் பிறகு, ஊழியருக்கு DA ஆக ரூ.5,580 கிடைக்கும். அதாவது ரூ.540 அதிகரிக்கும். அடிப்படை ஊதிய உயர்வுடன், அகவிலைப்படியின் மொத்த தொகையும் அதிகரிக்கும். ஆண்டு அடிப்படையில் பார்த்தால் சம்பளம் ரூ.6480 ஆக அதிகரிக்கும்.
31% DA இல் கணக்கீடு
இப்போது 3% அகவிலைப்படி அதிகரிப்புடன், மொத்த DA 31% ஆக மாறும். 7th Pay Commission மேட்ரிக்ஸின் படி, மத்திய ஊழியர்களின் லெவல்-1 இன் சம்பள வரம்பு ரூ.18,000 முதல் ரூ.56900 வரை இருக்கும். தற்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.66,960 ஆக இருக்கும்.
குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
ஊழியரின் அடிப்படை சம்பளம் | ரூ.18,000 |
புதிய அகவிலைப்படி (31%) | ரூ.5580/மாதம் |
இதுவரை அகவிலைப்படி (17%) | ரூ 3060/மாதம் |
அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்துள்ளது | 5580-3060 = ரூ.2520/மாதம் |
ஆண்டு சம்பள உயர்வு | 2520X12 = ரூ 30,240 |
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
ஊழியரின் அடிப்படை சம்பளம் | ரூ 56900 |
புதிய அகவிலைப்படி (31%) | ரூ 17639/மாதம் |
இதுவரை அகவிலைப்படி (17%) | ரூ 9673/மாதம் |
அகவிலைப்படி எவ்வளவு அதிகரித்துள்ளது | 17639-9673 = ரூ 7966/மாதம் |
ஆண்டு சம்பள உயர்வு | 7966X12 = ரூ 95,592 |
ALSO READ: 7th Pay Commission: தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு பம்பர் பரிசு, வருமானமோ வருமானம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR