மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான இரண்டாவது அகவிலைப்படி திருத்தம் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில், தற்போது அரசாங்கம் டிஏ கணக்கிடுவதற்கான ஃபார்முலாவை மாற்றியுள்ளது.  மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான டிஆர் ஆகியவை இந்த புதிய திருத்தத்தால் கணக்கிடப்பட முடியாது என்று கூறப்படுகிறது.  நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் வைத்துக்கொண்டு அரசாங்கம் சில திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.  தற்போது அரசாங்கம் ஃபார்முலாவில் செய்துள்ள புதிய மாற்றத்தின் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தில் மாற்றமோ அல்லது அவர்களின் சம்பளத்தில் பெரிய பாதிப்போ ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சகம் தற்போது டிஏ கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை 2016 ஆக மாற்றியுள்ளது என்று சில தகவல்கள் தெரிவிக்கிறது, மேலும் இது வேக் இண்டெக்ஸ் சீரிஸையும் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கு முன்னர் இருந்த பழைய தொடர் 1963-65 என அடிப்படை ஆண்டை கொண்டிருந்தாலும், தற்போதுள்ள அடிப்படை ஆண்டு 2016=100 ஆக இருக்கும்.  வேக் இண்டெக்ஸ் சீரிஸின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் 1963-65 முதல் 2016 வரை தேசிய புள்ளியியல் ஆணையத்தால் (என்எஸ்சி) அடிப்படை ஆண்டு திருத்தப்பட்டது.  மேலும் இது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) பரிந்துரைகளுக்கு ஒத்துழைக்கிறது.



மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கணுமா? மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதோ


7வது ஊதியக் குழு விதிகளின்படி ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தை வைத்து அவர்களுக்கான டிஏ தொகை கணக்கீடு செய்யப்படுகிறது.  தற்போதைய 12 சதவீத விகிதத்தின்படி, இதன் கணக்கீடு (அடிப்படை ஊதியம் x 12)/ 100 என்று இருக்கும்.  டிஏ சதவீதம் = 12-மாத சிபிஐ (நுகர்வோர் விலைக் குறியீடு) சராசரி - 115.76. முடிவு 115.76 ஆல் வகுக்கப்பட்டு பின்னர் 100 ஆல் பெருக்கப்படும்.  மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 4 சதவீத  டிஏ உயர்வை பெற்றால் அவர்களின் மொத்த அகவிலைப்படி 38 சதவீதமாக இருக்கும்.


மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் உயர உள்ளதா? மத்திய அமைச்சர் கொடுத்த மிகப்பெரிய தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ