EPFO வட்டி விகிதம் உயர உள்ளதா? மத்திய அமைச்சர் கொடுத்த மிகப்பெரிய தகவல்

EPFO Interest Rates Hike: இபிஎஃப்ஓ வட்டி விகிதம் அதிகரிக்கிறதா? இது குறித்து அரசாங்கம் தெரிவித்தது என்ன? விரிவாக காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2022, 12:26 PM IST
  • இபிஎஃப்ஓ வட்டி விகித உயர்வு.
  • பிஎஃப் கணக்கிற்கான வட்டி விகித உயர்வு குறித்து அரசு பெரிய அறிக்கையை அளித்துள்ளது
  • சிறுசேமிப்பு திட்டங்களை விட பிஎஃப்-ல் பெறப்பட்ட வட்டி இன்னும் அதிகமாக உள்ளது.
EPFO வட்டி விகிதம் உயர உள்ளதா? மத்திய அமைச்சர் கொடுத்த மிகப்பெரிய தகவல் title=

இபிஎஃப்ஓ வட்டி விகித உயர்வு: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. பிஎஃப் கணக்கிற்கான வட்டி விகித உயர்வு குறித்து அரசு பெரிய அறிக்கையை அளித்துள்ளது. 2021-2022 நிதியாண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி சபையில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி இந்த பெரிய தகவலை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் வழங்கிய தகவல்

உண்மையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் மறுபரிசீலனை செய்கிறதா என்று சபையில் ராமேஷ்வர் டெலியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர், வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று, அதாவது பிஎஃப் கணக்கின் வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதில்லை என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க | EPFO தொடர்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய ஆனால் பலருக்கு தெரியாத உண்மைகள் 

சிறு சேமிப்பு திட்டங்களை விட அதிக வட்டி

பொது வருங்கால வைப்பு நிதி (7.10 சதவீதம்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (7.40 சதவீதம்) மற்றும் சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (7.60 சதவீதம்) போன்ற பிற ஒப்பிடக்கூடிய திட்டங்களை விட இபிஎஃப்-ல் வட்டி விகிதம் அதிகம் என்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி தெரிவித்தார். அதாவது, ராமேஷ்வர் டெலியின் கூற்றுப்படி, சிறுசேமிப்பு திட்டங்களை விட பிஎஃப்-ல் பெறப்பட்ட வட்டி இன்னும் அதிகமாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் வட்டி விகித உயர்வை கருத்தில் கொள்ளாது. இபிஎஃப் மீதான வட்டி விகிதம் 8.10 சதவிகிதம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அமைச்சர் கூறியது என்ன? 

ராமேஷ்வர் டெலி, பிஎஃப் மீதான வட்டி விகிதம், இபிஎஃப்-ன் முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானத்தைப் பொறுத்தது என்றும், 1952-ம் ஆண்டு இபிஎஃப் திட்டத்தின்படி மட்டுமே அந்த வருமானம் விநியோகிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார். சிபிடி மற்றும் இபிஎஃப் 2021-22 ஆம் ஆண்டிற்கு 8.10 சதவிகிதத்தை பரிந்துரைத்தது என்றும் இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் ராமேஷ்வர் டெலி கூறினார். அதாவது, இந்த முறை பிஎஃப் மீதான வட்டி 8.10 என்ற விகிதத்தில் கிடைக்கும்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ரூ. 7500-ல் இருந்து ரூ. 25,000 ஆக உயரும் ஓய்வூதியம்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News