ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமுறை அகவிலைப்படியை அதிகரிப்பதாகவும், அதன்மூலம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்றும் ஏஐசிபிஐ தரவுகள் தெரிவிக்கிறது.  தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஏஐசிபிஐ புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் குறியீட்டு எண்கள் 0.3 புள்ளிகள் அதிகரித்துள்ளது மற்றும் ஜூன் 2022 உடன் ஒப்பிடும்போது ஜூலையில் இந்த எண்ணிக்கை 0.7 புள்ளிகள் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மொத்தமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 1 சதவீதம் உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | SBI Alert: கவனமாக இல்லையென்றால் முழு பணமும் காலி!! SBI விடுத்த எச்சரிக்கை


ஏஐசிபிஐ குறியீடு கடந்த ஜூன் மாதத்தில் 129.2 ஆக இருந்தது, அதுவே ஜூலை மாதத்தில் 129.9 ஆக இருந்தது, ஆகஸ்ட் மாதத்தில் 130.2 ஆக இருந்தது.  இப்போது 1 சதவீதம் உயரும்பட்சத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறியீடு 131.4 புள்ளிகள் வரை இருந்தால் 3 சதவீதம் அதிகரிக்கும்.  இதன்படி அகவிலைப்படி 3% அதிகரித்தால் ஊழியர்களுக்கான அகவிலைப்படி மொத்தமாக 41% உயரும், தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் நிலையில், 41% அகவிலைப்படி கிடைத்தால் அவர்களது சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.  அகவிலைப்படி உயர்வின் மூலம் ஊழியர்கள் பெறப்போகும் சம்பளம் பற்றி இப்போது பார்ப்போம்.



அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு :


ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900 
அகவிலைப்படி இதுவரை (38%) - ரூ 21,622/மாதம்
புதிய அகவிலைப்படி (34%) - ரூ 23,329/மாதம்
அகவிலைப்படி அதிகரிப்பு 23,329-21,622 = ரூ 1,707/மாதம்
ஆண்டு ஊதிய உயர்வு 1,707 X12 = ரூ 20,484


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு :


ஊழியரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000 
அகவிலைப்படி இதுவரை (38%) - ரூ.6840/மாதம்
புதிய அகவிலைப்படி (41%) - ரூ 7,380/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி 7,380-6840 = ரூ 540/மாதம் அதிகரித்தது
ஆண்டு ஊதிய உயர்வு 540 X12 = ரூ 6480


மேலும் படிக்க | பயணிகளின் கவனத்திற்கு! ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ்அப்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ